எவ்வளவு எதிர்ப்புகள் வந்தாலும் சொன்ன தேதியில் திமிரு பிடிச்சவன் வாரான்!
விஜய் ஆண்டனி நடிப்பில், புதுமுக இயக்குனர் கணேஷா என்பவர் இயக்கியுள்ள திரைப்படம் திமிரு புடிச்சவன். இப்படத்தில் விஜய் ஆண்டனி போலிஸாக நடித்துள்ளார். நிவேதா பெத்துராஜ் ஹீரோயினாக நடித்துள்ளார். இப்படம் தீபாவளிக்கு ரிலீஸாவதாக கூறியிருந்தது. ஆனால் சில காரணங்களால் அப்போது வெளியாகாமல் நவம்பர் 16இல் ரிலீஸாகும் என அறிவிப்பு வெளியானது.
ஆனால் அதேநாளில் காற்றின் மொழி, செய், உத்தரவு மஹாராஜா ஆகிய படங்கள் வெளியாவதாக இருந்தது. இதனால் கோபமடைந்த உத்தரவு மஹாராஜா பட ஹீரோ உதயா தயாரிப்பாளர் சங்கத்திற்கு, திமிரு புடிச்சவன் நவம்பர் 16இல் ரிலீஸாக கூடாது என கூறி கடிதத்தின் மூலம் தனது எதிர்ப்பை காட்டினார். ஆனால் திட்டமிட்டபடி வெளிமாகும் என திமிரு புடிச்சவன் படக்குழு தற்போது அறிவித்துள்ளது.
Source : tamil.CINEBAR.IN