கிருஸ்துமஸை குறிவைத்து இறங்கும் நான்கு பெரிய படங்கள்!
விடுமுறை நாட்கள் சேர்ந்து வந்தாலே சினிமா ரசிகர்களுக்கு கொண்டாட்டம்தான். எப்படியும் இரண்டு , மூன்று படங்கள் வெளிவந்துவிடும். அந்த வகையில், கிருஸ்துமஸ் தினத்தை முன்னிட்டு டிசம்பர் 21இல் நான்கு படக்கள் வெளிவர உள்ளன. இந்த நான்கு படங்களின் விவரங்கள் இதோ!
1.மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடித்துள்ள சீதகாதி திரைப்படம். சேதுபதி படம் என்றாலே நம்பி தியேட்டருக்கு செல்லலாம் என்கிற நம்பிக்கையை முந்தின படங்களின் கதை தேர்வின் மூலம் மக்களுக்கு காட்டிவிட்டார். ஆதலால் இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பும், வரவேற்பும் இருக்கும்.
2.இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்து, ராஜீவ் மேனன் இயக்கத்தில் நடிகர் ஜீ.வி.பிரகாஷ்குமார் நடித்துள்ள திரைப்படம் சர்வம் தாளமயம். பெரிய கலைஞர்களின் படம் என்பதால் இப்படத்திற்கும் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு இருக்கும்.
3.தரமான நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருபவர் நடிகர் விஷ்ணு விஷால். இவர் நடிப்பில் கடைசியாக வெளியான ராட்சசன் மிகப்பெரிய வெற்றி பெற்றதால், தற்போது ரிலீஸ் ஆக உள்ள சிலுக்குவார்பட்டி சிங்கம் படத்திற்கு ரசிகர்கள் எதிர்பார்ப்பார்கள்.
4.கடைசியாக நடிகர் அதர்வா நடிப்பில், ஆர்.கண்ணன் இயக்கியுள்ள பூமராங் திரைப்படமும் வெளியாக உள்ளது. அதர்வா சோலோ ஹுரோவாக நடித்த செம போத ஆகாத படம் ரசிகர்களை கவரவில்லை. நயன்தாராவுடன் நடித்த இமைக்கா நொடிகள் நல்ல வெற்றியை பெற்றது. பார்க்கலாம் இதில் எந்தெந்த படங்கள் மக்களா மனதை கவர்கிறது என்று!
Source : tamil.CINEBAR.IN