மாநகரம் படக்குழுவின் அடுத்த படத்திற்கு ஆட்கள் தேவை! தேதி, இடம் உள்ளே!!
2017 ஆம் ஆண்டு ஸ்ரீ , சுந்தீப் கிருஷ்ணன், ரெஜீனா, சார்லி, ராம்தாஸ் ஆகியோர் நடிப்பில் வெளியாகி மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்ற திரைப்படம் மாநகரம். இத்திரைப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி இருந்தார். இப்படத்தில் கதையை விட படத்தின் திரைக்கதை வெகுவாக பாராட்டப்பட்டது.
இந்த படத்தின் இயக்குனர் தனது அடுத்த படத்தை இயக்க உள்ளார். இப்படத்தை ட்ரீம் வாரியர் பிக்ச்சர்ஸ் பட நிறுவனம் தயாரிக்க உள்ளது. இப்படத்தில் நடிக்க தற்போது நடிகர் நடிகைகள் தேர்வு நடந்து வருகிறது. நாளை முதல் 14ஆம் தேதி வரை இந்த நடிகர் (20 வயது – 50 வயது) நடிகைகள் (20 – 25வயது) தேர்வானது வளசரவாக்கத்தில் நடைபெற உள்ளது.
Source : tamil.CINEBAR.IN