மிரட்டுகிறாரா திமிரு புடிச்சவன்?! தயாரிப்பாளர் சங்கத்திற்கு வந்த கடிதம்!! ரிலீஸ் தேதியில் மீண்டும் மாற்றம்!!
தீபாவளியை முன்னிட்டு கடந்த வாரம் செவ்வாய் கிழமையன்று தளபதி விஜயின் சர்கார் படம் வெளியானது. படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகமாக இருந்ததால், ஒரு சில படங்கள்.ரிலீஸில் பின்வாங்கின. முக்கியமாக விஜய் ஆண்டனியின் திமிரு புடிச்சவன் திரைப்படம் பின் வாங்கியது.
ஆதலால் இப்படத்தை நவம்பர் 16ஆம் தேதி ரிலீஸ் செய்ய படக்குழு முயற்ச்சித்து வருகிறது. ஆனால் அன்றைய தேதியில் ஜோதிகா நடிக்கும் காற்றின் மொழி, உத்தரவு மஹாராஜா, சித்திரம் பேசுதடி 2, செய் ஆகிய சிறிய பட்ஜெட் படங்கள் ரிலீஸாக தயாரிப்பாளர் சங்கத்தில் அனுமதி பெற்று உள்ளனர்.
ஆனால் திமிரு புடிச்சவன் படக்குழுவும் இதே தேதியை கூறியதிதால் உத்தரவு மஹாராஜா பட ஹீரோ உதயா தயாரிப்பாளர் சங்கத்திற்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், தேதி அறிவிக்கபட்ட சிறிய பட்ஜெட் படங்களுடன் அக்றிவிக்கப்படாமல் பெரிய பட்ஜெட் படங்கள் ரிலீஸாவது சிறிய பட தயாரிப்பாளர்களை குனிய வைத்து வெட்டுவது போல எனக்கூறி தயாரிப்பாளர் சங்கம் நேர்மையாக நடந்து கொள்ள வேண்டும் என கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். இதனால் மீண்டும் திமிரு புடிச்சவன் ரிலீஸாவதில் சிக்கல் வருமென தெரிகிறது.
Source: tamil.CINEBAR.IN