தமிழக சட்டப்பேரவை அடுத்த ஆண்டு ஜனவரியில் கூடுகிறது …!
தமிழக சட்டப்பேரவை அடுத்த ஆண்டு ஜனவரி முதல் வாரம் கூடுகிறது.
கடந்த மே 29-ஆம் தேதி தமிழக சட்டபேரவை தொடங்கி, ஜூலை 9ஆம் தேதியுடன் முடிவடைந்தது. இதன்பின்னர் தேதி குறிப்பிடாமல் சபை ஒத்திவைக்கப்பட்டது. கூட்டத்தொடர் முடிவடைந்து 6 மாதங்கள் நிறைவடைவதற்குள் அடுத்த பேரவைக் கூட்டத்தை நடத்த வேண்டும் என்பது விதி ஆகும். இதனால் தமிழக சட்டப்பேரவை அடுத்த ஆண்டு ஜனவரி முதல் வாரம் கூடுகிறது. ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உரையாற்றுகிறார்.