எவ்வளவு எதிர்ப்பு வந்தாலும் வசூலில் குறை வைக்காத தளபதி! மிரளவைக்கும் சர்க்கார் வசூல்!!
தலைப்பு அறிவித்து முதல் போஸ்டர் வெளியிட்ட நாள் முதல் வெளியாகி இன்று வரை பல சர்ச்சைகளுக்குள் சிக்கி திரையில் நன்றாக ஓடி கொண்டிருக்கும் திரைப்படம் சர்கார். இப்படத்தை சன் பிக்ச்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது. இப்படத்தினை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி இருந்தார். தளபதி விஜய் ஹீரோவாக நடித்திருந்தார்.
இப்படத்தில் இடம்பெற்ற காட்சிகள் ஆளும் கட்சியை விமர்சிப்பதாக கூறி பல போராட்டங்கள் நடத்தி படத்திலிருந்து சில காட்சிகளை நீக்கியும், சில இடங்களில் மியூட் செய்தும் படம் மறு தணிக்கை செய்து வெளியிடப்பட்டுள்ளது. இந்நிலையில் படம் இது வரை எவ்வளவு வசூல் செய்துள்ளது என தகல்வல்கள் வெளிவந்துள்ளது. படம் தமிழ் நாட்டில் 3 நாட்களில் மட்டும் சுமார் 63 கோடி ரூபாய் வசூல் செய்ததாம். இன்னும் இந்த வாரம் முடியாத நிலையில் படம் இன்னும் அதிகமாக வசூல் செய்து சாதனை செய்யும் படக்குழு நம்பிக்கை தெரிவித்துள்ளது. source : CINEBAR
DINASUVADU