சர்கார் படம் பார்த்துவிட்டு நடிகர் விஜய்யை தொடர்புகொண்டு சர்ச்சை காட்சிகளை நீக்குமாறு கூறினேன்…!அமைச்சர் கடம்பூர் ராஜு
சர்கார் படத்தில் சர்ச்சை காட்சி நீக்கப்பட்டதால் இனி அதிமுகவினர் போராட்டத்தில் ஈடுபட மாட்டார்கள் என்று அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அமைச்சர் கடம்பூர் ராஜு கூறுகையில், தமிழக அரசு திரைத்துறையின் பல்வேறு பிரச்னைகளை தீர்த்து வைத்து உதவி வருகிறது. தமிழகத்தில் திரையரங்கு கட்டணம் முறைப்படுத்தப்பட்டிருக்கிறது.பல திரைப்படங்கள் அரசை விமர்சித்து வந்திருக்கின்றது.அவற்றை நாங்கள் பெரிதுபடுத்தவில்லை .சர்கார் படம் பார்த்துவிட்டு நடிகர் விஜய்யை தொடர்புகொண்டு சர்ச்சை காட்சிகளை நீக்குமாறு கூறினேன்.பட விநியோகஸ்தரிடம் பேசி தயாரிப்பு நிறுவனம் மூலம் சர்ச்சை காட்சி நீக்கப்பட்டது .அதேபோல் சர்கார் படத்தில் சர்ச்சை காட்சி நீக்கப்பட்டதால் இனி அதிமுகவினர் போராட்டத்தில் ஈடுபட மாட்டார்கள் என்றும் அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார்.