விஜய் வீட்டிலும் நுழைந்தது போலீஸ்!நீளும் சர்கார் சர்ச்சைகள்!!
சர்கார் பட பிரச்சனை ரிலீசான நாள் முதல் அதிகரித்து கொண்டு இருக்கிறது. படத்தில் இடம் பெற்ற காட்சிகள், வசனங்கள் ஆளும் அரசை கோபமாக்கியது. தலால் சர்கார் படத்திலிருந்து சில காட்சிகளை நீக்குவதாக படக்குழு தீர்மானித்து தற்போது நீக்கியுள்ளது. இயக்குனர் முருகதாஸ் வீட்டிற்கு நேற்றே போலீஸ் சென்றது பிறகு அவர் இல்லை என தெரிந்ததும், அவர்கள் வீட்டை விட்டு சென்றனர்.
பிறகு இன்று இயக்குனர் முருகதாஸ் நீதிமன்றத்தில் முன்ஜாமீனுக்காக விண்ணப்பித்தார்.இந்நிலையில் பல்வேறு இடங்களில் சர்க்கார் படத்திற்குஎதிராக அதிமுக கட்சிக்காரர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். விஜய் ரசிங்கர்கள் பலர் மீது அனுமதியின்றி பேனர்கள் வைத்ததாக கூறி வழக்குகள் போடப்பட்டு வருகிரது. இந்நிலையில் படத்தின் கதாநாயகன் தளபதி விஜய்க்கு அவரது வீட்டில் போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. source : CINEBAR.IN
DINASUVADU