சர்கார் ஒரு ட்ரேட் மார்க் படம்….தெலுங்கு நடிகர் ட்வீட் பாராட்டு….!!!!குவியும் பாராட்டு கொண்டாட்டத்தில் சர்கார்..!!

Default Image

நடிகர் விஜய் நடிப்பில் வெளிவந்த சர்கார் படத்தை இயக்கிய ஏ.ஆர்.முருகதாஸின் ட்ரேட் மார்க் படம் சர்கார் என்று பாராட்டியுள்ளார் நடிகர் மகேஷ் பாபு.

Image result for sarkar

நடிகர் விஜய் ,நடிகை கீர்த்தி சுரேஷ், நடிப்பில் நேற்று  உலகம் முழுவதும் ரிலீஸானது சர்கார் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியத்தில் நடிகை வரலட்சுமி சரத்குமார், பழ.கருப்பையா, ராதாரவி, யோகி பாபு என முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்து, சன் பிக்சர்ஸ் தயாரித்த இந்த படம் நல்ல வசூல் வேட்டையை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.

Image result for mahesh babu

படத்தில் இசை புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க படத்தின் அனைத்துப் பாடல்களையும் பாடலாசிரியர் விவேக் எழுதியுள்ளார்.சர்கார் உலகம் முழுவதும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது. படம் வெளியான முதல் நாளே இதுவரை எந்தப் படமும் செய்யாத வசூல் சாதனை செய்துள்ளது.

Related image

ஒரு பக்கம் கொண்டாட்டம் வசூல் வேட்டை என்று தீபாவளிக்கு முடிந்தும் சர்கார் வெடித்து கொண்டிருக்கிறது திரையரங்குகளில் இந்த நிலையில் அதற்கு கூடுதல் சேர்க்கும் விதமாக சர்கார் படத்தைப் பாராட்டி ட்வீட் செய்துள்ளார் தெலுங்கின் முன்னணி நடிகராக வலம் வரும் மகேஷ் பாபு. அவர் சர்கார் படம், அரசியல் ரீதியாகக அனைவரையும் கவர்ந்து இழுத்துள்ளது.படம் முழுக்க ரசிக்கும்படி இருந்தது. இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸின் ட்ரேட் மார்க் படம் இது.ஒட்டுமொத்தப் சர்கார் படக்குழுவுக்கும் எனது வாழ்த்துகள் என மகேஷ் பாபு தெரிவித்துள்ளார் .

DINASUVADU

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்