மீண்டும் களம் காணும் ஆஸ்திரேலிய நட்சத்திர வீரர்கள்…!!

Default Image
வார்னர், ஸ்மித் மீதான தடையை நீக்க ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் தீவிரமாக பரிசீலனை செய்து வருகிறது.
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி, கடந்த மார்ச் மாதம் தென்ஆப்பிரிக்கா சென்று விளையாடியது. தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3-வது டெஸ்ட் கிரிக்கெட்டில் பந்தை சேதப்படுத்திய சர்ச்சையில் சிக்கிய ஆஸ்திரேலிய வீரர்கள் ஸ்டீவன் சுமித், டேவிட் வார்னர் ஆகியோருக்கு சர்வதேச மற்றும் உள்ளூர் போட்டிகளில் விளையாட தலா ஓராண்டு தடையும், இளம் வீரர் கேமரூன் பான்கிராப்டுக்கு 9 மாதங்கள் தடையும் விதித்து ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் அதிரடி நடவடிக்கையை எடுத்தது.  ஒருபக்கம் தடைவிதித்தாலும் மறுபக்கம் அவர்களுடைய தண்டனையை குறைக்க வேண்டும் என்ற கோரிக்கையும் வைக்கப்பட்டது.
ஆஸ்திரேலியாவின் கிரிக்கெட் வீரர்கள் சங்கம் தடையை நீக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறது. ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம் அதை நிராகரித்துவிட்டது. ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி, தொடர்ந்து தோல்விகளை சந்தித்து வருகிறது. இங்கிலாந்தில் படுதோல்வி அடைந்த அந்த அணி, அடுத்து பாகிஸ்தான் அணியுடன் நடந்த தொடரிலும் படுதோல்வி அடைந்தது. அடுத்து இந்தியாவுடன் மோத உள்ளது. இந்திய அணி இந்த மாதம் 21-ம் தேதி முதல் ஜனவரி 18-ம் தேதி வரை, 3 டி20, 4 டெஸ்ட் போட்டிகள், 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் அங்கு விளையாட உள்ளது.
இந்திய அணியை சமாளிப்பது இப்போதுள்ள ஆஸ்திரேலிய அணியால் கடினம் என்பதை ஆஸ்திரேலிய வீரர்கள் கூட்டமைப்பு அறிந்துள்ளது.
இந்தியாவுக்கு எதிரான தொடரில் தங்கள் அணி சிறப்பாக விளையாட வேண்டும் என்றால், ஸ்மித், வார்னரை அணியில் சேர்க்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது. இந்த கோரிக்கையை நிராகரித்த  ஆஸி. கிரிக்கெட் வாரிய தலைவர் டேவிட் பீவெர் தனது பதவியை திடீரென்று ராஜினாமா செய்தார். துணைத் தலைவராக இருந்த எர்ல் எட்டிங்ஸ் தற்காலிக தலைவராக நியமிக்கப்பட்டார். ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியை சரிவில் இருந்து மீட்க நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றார். இந்நிலையில் வார்னர், ஸ்மித் மீதான தடையை நீக்க ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் தீவிரமாக பரிசீலனை செய்து வருகிறது.
கிரிக்கெட் வாரியத்தின் தலைமை நிர்வாக அதிகாரி கெவின் ராபர்ட்ஸ் பேசுகையில், ”வார்னர், ஸ்மித் மீதான தடையை நீக்கக் கோரி ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்கள் அமைப்பு எங்களிடம் கோரிக்கை அளித்துள்ளது. விரைவில் இதுதொடர்பாக வாரிய கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு நல்ல முடிவு எடுப்பதும், பரிசீலனையில் வைப்பதும் வாரியத்துக்கு உட்பட்டது. வீரர்கள் கூட்டமைப்பின் நியாயமான கோரிக்கை பரிசீலிக்கப்படும். இப்போதைய சூழ்நிலையில் ஆஸ்திரேலிய அணிக்கு ஊக்கம் அளிக்க யார்? என்ன? தேவையென்பது ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் அறியும். வீரர்களின் உண்மையான உணர்வுகளுக்கு நிச்சயம் மதிப்பளிக்கப்படும்” என்று கூறினார்.இவர்கள் மீதான தடை இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்குள் நீக்கப்படும் என செய்திகள் தெரிவிக்கின்றன.
dinasuvadu.com 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்