டெல்லியில் 18 வாகனங்களுக்கு தீ…போலீஸ் தீவிர விசாரணை…!!
டெல்லியில் 18 வாகனங்களுக்கு தீ வைத்து விட்டு தப்பி ஓடிய போதை ஆசாமியை போலீசார் தேடி வருகின்றனர்.
தெற்கு டெல்லியில் மடங்கிர் பகுதியில் நிறுத்தப்பட்டு இருந்த 18 வாகனங்களுக்கு போதை ஆசாமி ஒருவர் தீ வைத்த காட்சிகள் அங்குள்ள சிசிடிவி கேமிராவில் பதிவாகியுள்ளது. ஆறு மோட்டார் சைக்கிள்களு முதலில் தீ வைக்கும், அந்த நபர் தீ வைக்கிறார்.
இதைத்தொடர்ந்து அருகாமையில் இருந்து கார்களும் தீ பற்றிக்கொள்கின்றன. இந்த சம்பவம் பற்றி அறிந்ததும், நிகழ்விடத்திற்கு போலீசார் வந்தனர். ஆனால். போலீசாரைக்கண்டதும் போதை ஆசாமி தப்பி ஓடி விட்டார். தீ வைக்கப்பட்ட வாகனங்களில் 8 இரு சக்கர வாகனங்களும், 2 கார்களும் முற்றிலும் எரிந்து நாசமாகின. ஆறு மோட்டார் சைக்கிள் மற்றும் இரண்டு கார்கள் பாதி எரிந்தது. நேற்று நடைபெற்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
dinasuvadu.com