விராட் கோலி பிறந்தநாள்…ரசிகர்கள் வாழ்த்து..!!
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலிக்கு இன்று தனது 30-வது பிறந்த தினத்தை கொண்டாடுகிறார்.
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரும் கேப்டனுமான விராட் கோலி இன்று தனது 30-வது பிறந்த தினத்தை கொண்டாடுகிறார். விராட் கோலியின் பிறந்த தினத்தை முன்னிட்டு அவரது ரசிகர்கள் இன்று டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் வாழ்த்து மழைபொழிந்து வருகின்றனர்.
கிரிக்கெட் உள்பட பல்வேறு துறைகளின் பிரபலங்களும் விராட் கோலிக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். விராட் கோலியின் வாழ்த்துச்செய்திகள், டுவிட்டரில் நிரம்பி வழிகின்றன. விராட் கோலி தனது மனைவி அனுஷ்கா சர்மாவுடன் ஹரித்வாரில் தனது பிறந்த நாளை கொண்டாடுகிறார்.
அண்மையில் நடைபெற்ற வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில், தொடர்ந்து மூன்று சதங்களை அடித்து அசத்திய விராட் கோலிக்கு, வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 20 ஓவர் போட்டித்தொடரில் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.
dinasuvadu.com