தாஜ்மகாலில் மூஸ்லீம்கள் தொழுகை நடத்த தடை…..!!அமலுக்கு வந்தது..!!
இந்தியாவில் பெரிதும் பேசப்படும் விரும்பப்படும் தாஜ்மஹால் உலக 7அதிசயங்களில் ஒன்று இங்கு தினமும் தொழுகை நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
7 உலக அதிசயங்களில் ஒன்றான டெல்லி ஆக்ராவில் உள்ள தாஜ்மகாலை பார்ப்பதற்கு தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் இந்தியா வருகிறார்கள்.இந்த அதியசம் தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் இயங்குவருகிறது.
ஆக்ராவில் தாஜ்மகாலை வெள்ளிக்கிழமை மட்டும் சுற்றி பார்க்க இயலாது. ஏனென்றால் அன்று பொது விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த விடுமுறை நாளான வெள்ளிக்கிழமை தோறும் ஆக்ராவில் உள்ள உள்ளூர் முஸ்லிம்கள் மட்டும் கட்டணமில்லாமல் தாஜ்மகாலுக்குள் செல்ல அனுமதிக்கப்பட்டு அன்று மதியம் அவர்கள் தொழுகை நடத்த அனுமதிக்கப்படுவார்கள்.தொழுகை நடத்தும் நாட்களை தவிர மற்ற நாட்களில் அதாவது சனிக்கிழமை முதல் வியாழக்கிழமை வரை வாரத்தின் 6 நாட்களும் கட்டணம் செலுத்தியே உள்ளே செல்லும் மற்ற ஊர் முஸ்லிம்கள் தொழுகை நடத்த அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள். இதனிடையே தாஜ்மகாலில் தினமும் மதியம் முஸ்லிம்கள் தொழுகை நடத்தி வந்தனர்.இந்த நிலையில் வெளிநாடு முஸ்லிம்கள் தாஜ்மகாலுக்குள் தொழுகை நடத்துவது தொல்லியல் துறைக்கு தெரியவந்தது. இது தாஜ்மகாலின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருப்பதாக மக்களிடையே புகார்கள் எழுந்தன.இந்த புகாரை தொடர்ந்து ஆக்ரா கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கை விசாரித்த ஆக்ரா மாவட்ட கூடுதல் மாஜிஸ்திரேட்டு வெள்ளிக்கிழமைகளில் வெளியூர் முஸ்லிம்கள் தாஜ்மகாலுக்குள் சென்று தொழுகை செய்ய தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
இது சர்ச்சையாக மாறிய உச்சநீதிமன்றத்துக்கு சென்றது. உச்சநீதிமன்றம் தனது தீர்ப்பில் தாஜ்மகாலில் வெள்ளிக்கிழமை மட்டும் தொழுகை நடத்த உத்தரவிட்டு மற்ற நாட்களில் தொழுகை நடத்த தடை விதித்து உத்தரவிட்டது. மேலும் தாஜ்மகாலுக்குள் வெள்ளிக்கிழமை நடக்கும் தொழுகையில் உள்ளூர் மக்கள் மட்டுமே கலந்து கொள்ள வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. உச்சநீதிமன்றத்தின் இந்த உத்தரவு சமீபத்தில் தொல்லியல் துறையிடம் ஒப்படைக்கப்பட்டது. அதை தொல்லியல் துறை அதிகாரிகள் ஆய்வு செய்து வந்த நிலையில் தாஜ்மகாலுக்குள் தினமும் தொழுகை நடத்துவதற்கு தடை விதிக்கும் நடவடிக்கையை தொல்லியல் துறையினர் அமல்படுத்தியுள்ளனர்.
இந்நிலையில் உள்ளூர் மற்றும் வெளியூர் முஸ்லிம்கள் ஏராளமானவர்கள் தாஜ்மகாலுக்குள் தொழுகை நடத்த முயன்றனர். அவர்களுக்கு உச்சநீதிமன்ற தீர்ப்பினை சுட்டிக்காட்டி அனுமதி மறுக்கப்பட்டது.மேலும் வழக்கமாக தாஜ்மகாலுக்குள் முஸ்லிம்கள் தங்கள் தொழுகை நடத்தும் பகுதியை தொல்லியல் துறை அதிகாரிகள் பூட்டி விட்டனர்.இதனால் தாஜ்மகால் வளாகத்துக்குள் எந்த இடத்திலும் தொழுகை நடத்தக் கூடாது என்று அனுமதி மறுக்கப்பட்டது.
தொல்லியல் துறையின் இந்த நடவடிக்கைக்கு தாஜ்மகால் தொழுகை கமிட்டி தலைவர் அலிசையது இப்ராகிம் உசைன் ,இமாம் சையது சாதிக் ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.ஆனால் தொல்லியல் துறையினர் அதை ஏற்கவில்லை.நாங்கள் உச்சநீதிமன்றத்தின் உத்தரவவை அமல்படுத்தியுள்ளோம் என்று கூறினர்.
DINASUVADU