அவை தலைவரை நீக்கி…..அதிரடி காட்டும் அதிபர்….ரணிலுக்கு நெருக்கடியா…???

Default Image

இலங்கையில் பிரதமராக இருந்த ரணில் விக்கிரமசிங்கே அதிரடியாக நீக்கப்பட்டார். அவரை நீக்கி அதிபர் சிறிசேனா அதிரடி அறிவிப்பை வெளியிட்டதோடு மட்டுமல்லாமல் இலங்கையின் முன்னாள் அதிபர்  ராஜபக்சே பிரதமராக அறிவிக்கப்பட்டு பதவியேற்பும் நிகழ்ந்தது.ஒரு பக்கம் ரணிலின் பதவி பறிக்கப்பட்டும் ராஜபக்சேவுக்கு பதவி வழங்கியும் இதில் அதிபரின் அதிகார கை ஓங்கியிருந்தது.

Image result for SRI LANKA POLITICS

இருந்தாலும் இலங்கையில் ராஜபக்சே பிரதமராக அறிவிக்கப்பட்ட பிறகும் அங்கு அரசியல் குழப்பம் நீடித்து வருகிறது. ஒரு பக்கம் பிரதமர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட பிறகும் நான் தான் பிரதமராக நீடிக்கிறேன் என்று ரணில் விக்ரமசிங்கே கூறி வரும் வேளையில் இது தொடர்பாக அந்நாட்டு நாடாளுமன்ற சபாநாயகருக்கு ரணில் விக்ரமசிங்கே கடிதம் எழுதினார். நாடாளுமன்றத்தில் ராஜபக்சே அரசு மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர எதிர்க்கட்சிகள் தீர்மானித்துள்ளன.

Related image

இலங்கை நாடாளுமன்றத்தை பொறுத்தவரை மொத்தம் 225 எம்பிக்கள் உள்ள நிலையில் பெரும்பான்மையை நிரூபிக்க குறைந்தபட்சம் 113 எம்.பி.க்களின் ஆதரவு இருந்தாலே போதும்.இந்நிலையில் ரணில் விக்ரமசிங்கேவுக்கு ஏற்கெனவே ஆட்சியமைக்க ஆதரவளித்து வந்த தமிழ் தேசிய கூட்டமைப்பு இப்போதும் ரணிலுக்கு ஆதரவாக வாக்களிக்க உள்ளதாக அறிவித்துள்ளது.ரணிலுக்கு ஆதரவாக ஐக்கிய தேசிய கட்சி 99 எம்.பி.க்கள் மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் 14 எம்.பி.க்களும் வாக்களிக்க உள்ளனர். ஆனால் பிரதமராக பதவியேற்றுள்ள ராஜபக்சேவுக்கு ஆதரவாக ஸ்ரீலங்கா மக்கள் சுதந்திர கட்சியின் எம்.பி.க்கள் உட்பட 105 எம்.பி.க்கள் கைவசம் உள்ளனர். இதனால் மேலும் பல எம்.பி.க்களை தங்களின் பக்கம் இழுக்க வேண்டிய கட்டாயம் ராஜபக்சேவுக்கு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் எங்கள் முகாமில் இருக்கும் எம்.பி.க்களை விலைக்கு வாங்கும்  முயற்சியில் சிறிசேனா கட்சியினர் ஈடுபட்டுள்ளனர் என்று எதிர்க்கட்சியினர் குற்றம்சாட்டி வருகின்றனர்.

Image result for SRI LANKA POLITICS

ராஜபக்சேவுக்கு ஆதரவாக வாக்களியுங்கள் அப்படி நீங்கள் வாக்களித்தால் அமைச்சர் பதவி தர தயாராக உள்ளதாக ஸ்ரீலங்கா மக்கள் சுதந்திர கட்சியின் எம்.பி. திசநாயகே மற்றும் ஐக்கிய தேசிய கட்சி பலித ரங்கே எம்.பி.பண்டாரவுடன் பேரம் பேசும் ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.இது மட்டுமல்லாமல் தமிழர்களின் ஆதரவை பெற வேறு சில வழிகளிலும் ராஜபக்சே கட்சி முயன்று வருகிறது.இதில் தமிழ் மக்களின் அடிப்படை கோரிக்கைகள் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த நாங்கள் தயாராக உள்ளோம் என்று ராஜபக்சேவின் மகனும் எம்.பி.யுமான நமல் கூறியுள்ளார்.இந்நிலையில் வரும் 7-ம் தேதி நாடாளுமன்றம் கூடும் என்ற நிலையில் 14 தேதி கூடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.இது குறித்து தெரிவித்த ரணில் நாடாளுமன்றத்தை கூட்டாமல் இழுத்தடிக்கப்படுவது பேரம் பேசுவதற்காகவே என்று தெரிவித்தார்.

இன்று இலங்கை அரசியலில் அதிரடி மாற்றத்தை  கண்டுள்ளது.தொடர்ந்து அதிபரின் அதிரடி உத்தரவால் அந்நாட்டில் அரசியல் பதற்றம் நிலவி வருகிறது.அதிபர் சிறிசேனா இன்று அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார்.அதில் நாடாளுமன்ற அவையின் தலைவர் திடீரென நீக்கப்பட்ட  சில மணி நேரத்துக்குல் நாடாளுமன்ற அவையின் புதிய தலைவராக தினேஸ் குணரத்னேவை பதவியேற்றார்.

Image result for SRI LANKA POLITICS

அவரும் நாடாளுமன்ற தலைவரின் அலுவலகத்தில் வந்து தனது பொறுப்பை ஏற்றுக்கொண்டார்.நாடாளுமன்ற அவையின் தலைவராக இருந்தவர் கரு ஜெயசூர்யா என்பது குறிப்பிடத்தக்கது.

DINASUVADU

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்