முதலமைச்சர் பழனிச்சாமி மற்றும் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் தீபாவளி வாழ்த்து …!
தமிழக முதலமைச்சர் பழனிச்சாமி மற்றும் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் தீபாவளி வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
தமிழகம் முழுவதும் விமர்சையாக கொண்டாடப்படும் தீபாவளி இந்த ஆண்டு நாளை முதல் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
இந்நிலையில் தமிழக முதலமைச்சர் பழனிச்சாமி மற்றும் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் தீபாவளி வாழ்த்து தெரிவித்துள்ளனர்.அவர்கள் வெளியிட்ட வாழ்த்து செய்தியில் , மக்கள் கொண்டாடும் பண்டிகைகளில் சிறப்பானது தீபாவளி திருநாள். இருளை நீக்கி ஒளியை ஏற்றிடும் தினமாக, தீமை அகன்று நன்மைகள் பெருகும் நாளாக தீபாவளி விளங்குகிறது என்று தீபாவளி வாழ்த்து தெரிவித்துள்ளனர்.