தற்கொலைக்கு முயன்றேன்…….யாரும் அறிந்திராத ஆஸ்கார் நாயகனின்…….அதிர வைக்கும் மறுபக்கம்..!!

Default Image

நான் தற்கொலைக்கு முயன்றேன் என்று ஆஸ்காரர் நாயகன்,இசை புயல் இசையமைப்பாளர் AR ரகுமான் உருக்கமாக தெரிவித்துள்ளது ரசிகர்களில் மத்தியில் யாரும் அறிந்திராத அவருடைய மறுபக்கத்தை காட்டிகொடுத்துள்ளது.எத்தனை வெற்றி, எத்தனை புகழ்,எத்தனை விருதுகள் என்றாலும் சற்றும் முகத்தில் ஒரு தெளிவான தோரணையோடு அமர்ந்தும்,விருது வாங்கும் பொழுது எல்லா புகழும் இறைவணுக்கே என்று அன்னார்ந்து கூறுவதும் இன்னும் கண்களில் காட்சியாய் வலம் வந்து கொண்டிருக்கிறது.

Related image

AR ரகுமான் என்றால் ஹீட் பாடல்கள்,படு மாஸ் கிளாஸ் என்று ரசித்து பார்த்த நமக்கு அவருடைய மறுபக்கத்தை பற்றி யாரும் அறியமாட்டார்கள் அப்படி அறியவே இந்த  The Authorized Biography of AR Rahman  வெளியிடப்பட்டுள்ளது.இந்த புத்தகம் இசை புயலின் வாழ்க்கை வரலாற்றை எடுத்துக்கூறுகிறது.அதில் ரகுமான் என்னுடைய 25வது வயது வரை தற்கொலை எண்ணங்கள் என்னை ஆக்கிரமித்திருந்தது என்று உருக்கமாகத் தெரிவித்துள்ளார்.

Related image

மும்பையில் Notes of a Dream: The Authorized Biography of AR Rahman” என்ற புத்தகம்  நேற்று வெளியிடப்பட்டது. இந்த வெளியிட்டு விழாவில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் தனது வாழ்க்கையில் நடந்த பல்வேறு நிகழ்வுகளைப் பகிர்ந்துகொண்டார்.அதில் இந்த நாடு ஏ.ஆர்.ரஹ்மான் என்ற இசையமைப்பாளனின் திறமையை அடையாளம் காண்பதற்கு முன்பு  வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்திலும் தோல்வியைச் சந்தித்தவன். என்னுடைய ஒவ்வொரு நாளும் தற்கொலை செய்துகொள்ள தான் எண்ணினேன். அந்த கடினமான நாட்கள் தான் என்னை எதிர்காலத்தில் எதையும் எதிர்கொள்ள கூடிய மனநிலையை உருவாக்கியது.

Related image

மேலும் என்னுடைய 25-வது வயது வரை தற்கொலை நான் செய்துகொள்ள தான் விரும்பினேன்.இந்த எண்ணம் என் தந்தையின் இழப்பும் ஒரு காரணமாக அமைந்தது. இந்த காலக்கட்டத்தில் ருவகையான வெறுமையை என்னுள் தோன்றியது. இந்த வெறுமையே  என்னை ஒருவகையில் அச்சமற்றவனாக மாற்றியது என்று தான் கூற வேண்டும். இறப்பு என்பது எல்லோருக்கும் பொதுவானது தான் அது எதுவாக இருந்தாலும் உருவாக்கப்படும்போதே முடிவு எழுதப்பட்டிருக்கிறது.

Related image

அப்படி இருக்கும் போது நான் எதற்காக  அஞ்ச வேண்டும்?என் வாழ்வில் பஞ்சதன் ரெக்கார்ட் இன் என்ற ரெக்கார்டிங் ஸ்டுடியோ  கட்டியபிறகு தான் திருப்புமுனை ஏற்பட்டது. அதற்கு முன் நான் செயலற்றவனாக தான் இருந்தேன்.மேலும் என் அப்பாவின் இழப்பிற்கு பிறகு என்னால் அதிக படங்கள் பண்ண முடியவில்லை. ஆனால் 35 படங்கள் எனக்குக் கிடைத்தது.அப்படி கிடைத்த போதும் நான் 2 படங்களுக்கு மட்டும் தான் இசையமைத்தேன். என்னை நீ எப்படி இந்த துறையில் பிழைக்கப்போகிறாய் எனப் பலரும் ஆச்சரியத்தோடு கேட்டனர்.சிலர் உன்னிடம் எல்லாமே இருக்கு அதைப் பற்றிக்கொள் என்றனர்.அப்போது எனக்கு 25 வயது. என்னால் எதையுமே செய்ய முடியவில்லை.ஆனால் எனது 12 முதல் 22 வயதில் நான் அனைத்தையும் செய்து முடித்திருந்தேன்.இவ்வாறு நம் வாழ்க்கையின் இக்கட்டான காலத்தில் பயணித்த பாதையை கூறிய இசை புயல் நான் என் உண்மையான பெயரான திலிப் குமார் என்ற பெயரை அறவே வெறுத்தேன் அந்த பெயர் எனக்குப் பிடிக்கவில்லை.ஏன் அந்த பெயரையே வெறுத்தேன்  ஏன் என்று எனக்குத் தெரியவில்லை. நான் வேறொருவனாக மாற ஆசைப்பட்டேன். இவ்வாறு உருக்கமாக பேசிய புயல்  உங்களுக்குள் நீங்கள் ஆழமாக இறங்க வேண்டும். உங்கள் மனதின் குரலை கேளுங்கள். அது கடினமானது தான் இருந்தாலும் ஒருமுறைச் செய்துவிட்டால் நம்மையே மறந்துவிடலாம்.
Related image
இதை நான் செய்தேன் நான்  என்னுள் ஆழமாகச் செல்ல முடியாமல் போகும் சமயத்தில் அதிகாலை 5 அல்லது 6 மணி ஏன் நள்ளிரவுகளில் பணியாற்றுவேன். நாம் செய்ததையே செய்து கொண்டிருந்தால் சோர்வுதான் ஏற்படும்.புதிதாக எதையாவது செய்யவேண்டும். அப்பொழுது தான்  முடிவெடுத்தேன் என்னளவில் பயணம் செய்ய வேண்டும் என்று அது மட்டுமல்லாமல் குடும்பத்துடன் நேரத்தைச் செலவழிக்கவேண்டும்.
Image result for ar rahman FAMILY
நான் அதை அதிகமான நேரங்களில் செலவிடவில்லை என்றாலும் அது தான் எனக்கு அழகானது இது தான் எனக்கு  மிகவும் உதவுகிறது என்று கூறிய அவர் நம் கண்களில் கண்ணீரை வரவைக்கும் அவருடைய இந்த பதிவு ரசிகர்கள் மத்தியில் அவரின் மேல் இன்னும் அதிகமான அன்பையும்,மரியாதையையும்  ஏற்படுத்தியுள்ளது.மேடைகளில் கம்பீரமான குரலுக்கு பின் இப்படியொரு கடிமான மறுபக்கம் தான் அவரை இன்று நம் முன் இசை புயலாக,ஆஸ்கார் நாயகனாக மாற்றியுள்ளது.
Related image
DINASUVADU

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்