வெஸ்ட் இண்டீஸை சுருட்டிய ரோகித் படை……110 ரன்கள் இலக்கு..!!
மேற்கிந்திய தீவுகள் அணி இந்தியாவில் சுற்று பயணம் மேற்கொண்டு கிரிகெட் தொடர்களில் விளையாடிவருகிறது.இதில் டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடரை கைப்பற்றிய நிலையில் டி20 போட்டி அறிவிக்கப்பட்டது.
முதல் டி20 போட்டிக்கான அணி அறிவிக்கப்பட்ட நிலையில் ரோகிட் தலைமையிலான இந்திய அணி இன்று கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் களமிரங்கியது.இந்நிலையில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
முதலில் பேட்டிங் செய்த மேற்கிந்திய தீவுகள் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 109 ரன்கள் சேர்த்தது.இதனால் மேற்கு கிந்திய அணியை சுருட்டியது ரோகித் படை.மேற்கு கிந்திய அணியின் இன்னிங்ஸை முதலில் ஷாய் ஹோப் மற்றும் தினேஷ் ராம்தின் இணை தொடங்கினர். இந்த ஜோடியை 2வது ஓவரிலே உமேஷ்யாதவ் அக்குவேராக பிரித்தார்.இதனிடையே அவுட்டான தினேஷ் ராம்தின் 2 ரன்களில் வெளியேறினார். அடுத்து ஹோப்புடன், ஹெட்னெயர் கைகோத்தார்.ஹோப் 14 ரன்களிலும், ஹெட்மெயர் 10 ரன்களிலும் அடுத்தடுத்த ஓவர்களில் ஆட்டமிழந்து நடையை கட்டஅடுத்து வந்த அதிரடி வீரர் பொலார்ட் இந்திய அறிமுக வீரர் குர்ணால் பாண்டியாவின் பந்துவீச்சில் ஆட்டமிழந்து வெளியேறினார்.
அடுத்த ஓவரில் 5 ரன்களில் அதிரடியான ஆட்டக்காரரான டேரன் பிராவோவும் வெளியேறினார். பவல் மற்றும் கேப்டன் பிராத்வெயிட் ஆகியோர் தலா 4 ரன்கள் எடுத்து அவர்களையும் வெளியேற்றியது ரோகித் படை இந்நிலையில் மேற்கு கிந்திய அணி 14.5 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 63 ரன்கள் சேர்த்து மோசமாக தடுமாறியது.கடைசி ஓவர்களில் அறிமுக வீரர் ஆலென் தனது அதிரடியை காட்ட அந்த அணி 100 ரன்களைக் கடந்தது ஒரு வழியாக பெருமூச்சு விட்டது. அந்த அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 109 ரன்கள் சேர்த்தது. இந்திய அணி தரப்பில் குல்தீப் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.இவருடைய விக்கெட்டு தான் ஆட்டத்தின் போக்கை மாற்றியது.
இதனால் மேற்கு கிந்திய அணி இந்திய அணிக்கு 110 ரன்கள் இலக்கு நிர்ணயித்ததுள்ளது. 110 என்ற இலக்குடன் பேட்டிங்கிற்கு ரோகித் தலைமையிலான இந்திய படை களமிரங்குகிறது.
DINASUVADU