இன்று முதல் டி20…!தோனி ,கோலி இல்லாமல் சாதிக்குமா ரோகித் படை ..!

Default Image

இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையேயான முதல் 20 ஓவர் ஆட்டம் கொல்கத்தா ஈடன்கார்டன் மைதானத்தில் இன்று நடைபெறுகிறது.

வெஸ்ட் இண்டீஸ் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. டெஸ்ட் தொடரை  2-0 என்ற கணக்கில் இழந்தது.அதேபோல் 5 போட்டிக் கொண்ட ஒருநாள் தொடரை 3-1 என்ற கணக்கிலும் இந்தியா கைப்பற்றியது.

இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையேயான 3 போட்டிக் கொண்ட 20 ஓவர் தொடரில் முதல் ஆட்டம் கொல்கத்தா ஈடன்கார்டன் மைதானத்தில் இன்று  (4-ந்தேதி) நடைபெறுகிறது.

விராட் கோலிக்கு 20 ஓவர் போட்டியில் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. இதனால் ரோகித்சர்மா கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.20 ஓவர் போட்டிக்கான அணியில் இருந்து முன்னாள் கேப்டனும், அணியின் சீனியர் வீரருமான டோனி நீக்கப்பட்டுள்ளார். இது நாடு முழுவதும் உள்ள அவரது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதனால் இந்திய அணிக்கு சவால் காத்திருக்கிறது.இன்று  இரவு 7 மணிக்கு தொடங்குகிறது போட்டி. ஸ்டார் ஸ்போர்ட்ஸ் டெலிவிசனில் இந்தப்போட்டி நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்