ஸ்டாலினும், தினகரனும் ரகசிய சந்திப்பு ….!இரு வேறு கட்சிகளின் தலைவர்கள் ஒரே ஹோட்டலில் தங்க கூடாதா…!திமுக பொருளாளர் துரைமுருகன் பாய்ச்சல்
மு.க.ஸ்டாலின் ,தினகரன் ஒரே ஹோட்டலில் தங்கியது குறித்து திமுக பொருளாளர் துரைமுருகன் பதில் தெரிவித்துள்ளார்.இதேபோல் அமைச்சர் உதயகுமார் கூறுகையில், மதுரையில் ஸ்டாலினும், தினகரனும் ஒரே தனியார் விடுதியில் தங்கினர். அதன் பின்னர் தான் இடைத்தேர்தலை சந்திக்கும் சூழல் உருவாகி உள்ளது .திமுகவுடன் தினகரனுக்கு மறைமுக தொடர்பு உள்ளது, இது காலத்தால் அவிழ்க்கப்படும் என்று தெரிவித்தார்.
இந்நிலையில் ,மு.க.ஸ்டாலின் ,தினகரன் ஒரே ஹோட்டலில் தங்கியது குறித்து திமுக பொருளாளர் துரைமுருகன் பதில் தெரிவித்துள்ளார்.அவர் கூறுகையில், இரு(திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்,அமமுக துணைப்பொதுச்செயலாளர் தினகரன் ) வேறு கட்சிகளின் தலைவர்கள் ஒரே ஹோட்டலில் தங்க கூடாதா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.அதேபோல் வானிலையே பொய்த்து விடுகிறது. தேர்தல் வருமா இல்லையா என்று எப்படி சொல்ல முடியும்.தேர்வாய் கண்டிகை நீர்த்தேக்கம் குறித்து இந்திய கணக்காய்வு தணிக்கை துறை அறிக்கையின் படி தான் நான் பேசினேன், ஆதாரமின்றி பேசவில்லை என்று திமுக பொருளாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.