உலக புகழ்பெற்ற மரகத நடராஜர் சிலை……..திருட முயன்ற திருடன்….வெட்டுபட்ட நிலையிலும் போராடிய காவலாளி…!!

Default Image

பல கோடி மதிப்பிலான மரகத நடராஜர் சிலையை திருடமுயற்சி செய்த கொள்ளையர்களுடன் சண்டையிட்ட காவலாளியை அரிவாளால் கொள்ளையர்கள் வெட்டிய நிலையிலும் போராடியுள்ளார்.

Image result for ராமநாதபுரம் மரகத நடராஜர் சிலை

இராமநாதபுரம் அருகே  திருஉத்திரகோசமங்கையில் பிரசிதிபெற்ற நடராஜர் ஆலயத்தில் மிகவும் பழமை வாய்ந்த மரகத நடராஜர் சிலை அமைந்துள்ளது.உலகிலே பெரிய மரகத கல்லால் வடிவமைக்கப்பட்ட சிரித்த முகம் கொண்ட 5 1\2 அடி சிலை இதுவாகும்.இத்தகைய சிலையை கொள்ளையடிக்க முயற்சித்தது கொடூரத்தின் உச்சமாகும்.

Image result for மரகத நடராஜர் ராமநாதபுரம்

எப்பொழுதும் சந்தனம் பூசப்பட்ட நிலையில் காட்சி தரும் இந்த சிலைய நேற்று மரகத நடராஜருக்கு பூஜை முடிந்ததும் ஓதுவார்கள் கோவிலைப் பூட்டிவிட்டு சென்ற நிலையில் கோவிலை பாதுகாக்க காவல் பணியில் செல்லமுத்து என்பவர் ஈடுபட்டிருந்தார்.

Related image

நேற்றிரவு எப்பொழுதும் போல் கோவிலி காவல்பணியில் ஈடுபட்டிருந்தார்.நள்ளிரவில் கோவிலுக்குள் நுழைந்த கொள்ளையர்கள் மரகத நடராஜர் சிலையை  திருட முயற்சி செய்தனர்.இதனால் அங்கு சத்தம் கேட்டு வந்த காவலர் செல்லமுத்துவை கொள்ளை கும்பல் தலையில் அரிவாளால் வெட்டியது இருந்த போதிலிலும் அவர் போராடியுள்ளார்.

Image result for மரகத நடராஜர் ராமநாதபுரம்

மேலும் இந்த அரிவாள் வெட்டால் அவர் பலத்த காயம் அடைந்தார்.அவரை வெட்டி விட்டு கருவறைக்குள் உகுந்து கொள்ளை அடிக்க சென்ற கொள்ளையர்கள் சிலையை திருட முயற்சித்த போது திடீரென அலாரம் அடித்தது.இதனால் மிரண்டு பயந்துபோன கொள்ளையர்கள் அங்கிருந்து தப்பியோடிய நிலையில் எச்சரிக்கை மணியடித்த நிலையில் அருகிலிருந்தோர் கோவிலுக்கு வந்தனர் அங்கு இரத்த வெள்ளத்தில் காயமடைந்து கிடந்த செல்லமுத்துவை மீட்டு ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.இந்த கொள்ளை முயற்சி குறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி கொள்ளைக்காரர்களை தேடிவருகின்றனர்.

Related image

மேலும் கடந்த சில நாட்களுக்கு முன்னர்தான் இந்த கோவிலின் பாதுகாப்பு அதிகாரியான சுப்பையா என்பவர் அதிரடியாக மாற்றப்பட்டு கண்ணன் என்பவர் நியமிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.எச்சரிக்கை மணியடித்தால் பலகோடியும், பழம்பெருமையும் வாய்ந்த மரகத நடராஜர் சிலை பாதுகாக்கப்பட்டது.மேலும் காயமடைந்த நிலையிலும் சிலை பாதுகாக்க போராடிய காவலாளியை பாராட்டி வருகின்றனர் அப்பகுதி மக்கள்.

DINASUVADU

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்