இந்த தேதியை குறிவைக்கும் நயன்தாரா – தனுஷ் – கார்த்தி! ரிலீஸ் அப்டேட்ஸ்!!
தனுஷ் – இயக்குனர் பாலாஜி மோகன் கூட்டணியில் ஏற்கனவே வெளியாகி நல்ல வெற்றி பெற்ற திரைப்படம் மாரி. இதன் இரண்டாம் பாகம் தற்போது தயாராகி விட்டது. இந்த மாரி 2 படம் ரெடியாகி படம் டிசம்பரில் வெளியாகும் என முதல் பார்வையேடு படக்குழு அறிவிப்பை வெளியிட்டது.
அதேபோல கடைக்குட்டி சிங்கம் படத்தை தொடர்ந்து நடிகர் கார்த்தி நடித்து வரும் திரைப்படம் தேவ். இப்படத்தை ரஜத் ரவிசங்கர் என்பவர் இயக்கி வருகிறார். ஹாரிஸ் ஜெயராஜ் இப்படத்திற்க்கு இசையமைக்கிறார். இப்படமும் டிசம்பர் 21இல் களமிறங்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
இவர்கள் இருவரது படங்களுக்கும் கடும் போட்டியாக சோலோ ஹீரோயினாக லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிக்கும் அய்ரா திரைப்படம் வெளியீட்டிற்கு தயாராகி வருகிறது. அந்தபடமும் டிசம்பர் 21ஆம் தேதி வெளியாகும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. Source : CINEBAR
DINASUVADU