மக்கள் விரும்பும் சர்கார் விரைவில் …!சர்ச்சையை ஏற்படுத்திய சர்கார் போஸ்டர் …!
சென்னையில் பல இடங்களில் மக்கள் விரும்பும் சர்கார் விரைவில் என்ற போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது.
நடிகர் விஜய்- நடிகை கீர்த்தி சுரேஷ்,இயக்குநர் AR முருகதாஸ் இயக்கத்தில், AR ரகுமான் இசையில் சன்பீக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு சர்கார் என்று தலைப்பு வைத்துள்ள படக்குழு படத்தை தீபாவளிக்கு வெளியிட தயாராகி வருகின்றனர்.தளபதியின் மாஸ்,கிளாஸ் என்று அதிரடியான இப்படம் வெளியாக சில சர்ச்சைகளையும் சந்தித்து வருகின்ற 6 ஆம் தேதி வெளியாக உள்ளது.
இந்நிலையில் சென்னையின் பல்வேறு பகுதிகளில் சர்கார் திரைப்படம் தீபாவளிக்கு திரையிடப்பட உள்ள நிலையில், “மக்கள் விரும்பும் சர்கார் விரைவில்“ என்ற தலைப்பிலும் ஒரு விரல் புரட்சி ஆரம்பம்” என்றும் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது.