தீபாவளியையொட்டி இதுவரை 3 லட்சத்துக்கும் அதிகமானோர் பேருந்துகளில் பயணம் …!போக்குவரத்துத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்
தீபாவளியையொட்டி இதுவரை 3 லட்சத்துக்கும் அதிகமானோர் பேருந்துகளில் பயணம் செய்துள்ளனர் என்று போக்குவரத்துத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
தமிழகம் முழுவதும் விமர்சையாக கொண்டாடப்படும் தீபாவளி இந்த ஆண்டு நவம்பர் 6 ஆம் தேதி முதல் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
இந்நிலையில் தீபாவளி தொடர்பாக போக்குவரத்துத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பயண விவரம் தெரிவித்துள்ளார் .அவர் கூறுகையில், தீபாவளியையொட்டி இதுவரை 3 லட்சத்துக்கும் அதிகமானோர் பேருந்துகளில் பயணம் செய்துள்ளனர்.இதுவரை 2,690 பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளன என்றும் போக்குவரத்துத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.