விருதுநகரில் உள்ள கல்லுாரியில் தீபாவளி கொண்டாட்டம்…!
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கல்லுாரியில் தீபாவளி கொண்டாட்டம் நிகழ்ச்சி நடந்தது.
தமிழகம் முழுவதும் விமர்சையாக கொண்டாடப்படும் தீபாவளி இந்த ஆண்டு நவம்பர் 6 ஆம் தேதி முதல் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
விருதுநகர் மாவட்டத்தில் சிவகாசியில் உள்ள பெல் இன்ஸ்டிடியூட் ஆப் ஓட்டல் மேனேஜ்மென்ட் கல்லுாரியில் தீபாவளி சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. ஆசிரியர்கள், மாணவர்கள் பாரம்பரிய உடையணிந்து பட்டாசு வெடித்து கொண்டாடினர்.மாணவர்களுக்கு இனிப்பு, உணவு வழங்கப்பட்டது. ஆசிரியர்களும் மாணவர்களும் ஒருவருக்கொருவர் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர்.