எமதர்மனாக மிரட்டும் ஹீரோ யோகிபாபுவின் அடுத்த படம்!
தமிழ் சினிமாவில் தற்போது இருக்கும் முன்னனி காமெடி நடிகர்களுள் ஒருவர் நடிகர் யோகிபாபு. இவர் தற்போது தல நடிக்கும் விஸ்வாசம் படத்திலும், தளபதி விஜய் நடிக்கும் சர்கார் படத்திலும் நடித்து வருகிறார். இந்நிலையில் அடுத்ததாக கூர்கா எனும் படத்தில் ஹீரோவாக நடிக்க உள்ளார்.
கூர்கா படத்தை டார்லிங் பட இயக்குனர் சாம் ஆண்டன் இயக்க உள்ளார். இதில் ஹீரோயினாக கனடா நாட்டு மாடல் அழகி நடிக்க உள்ளார். இதனை தொடர்ந்து நடிகர் யோகிபாபு ஹீரோவாக நடிக்க கமகட்டாகி உள்ள திரைப்படம் தர்மபிரபு.
இப்படத்தை முத்துகுமரன் என்பவர் இயக்க உள்ளார். படத்திற்க்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்க உள்ளார். பட பாடல்களை யுகபாரதி எழுத இருக்கிறார். இதில் வசனங்களை முத்துகுமரனும், யோகிபாபுவும் எழுத உள்ளனர். இப்பட படப்பிடிப்பு விரைவில் துவங்க உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. Source : CINEBAR
DINASUVADU