இந்தியாவில் தலைமை அதிகாரியை நியமிக்க வாட்ஸாப்புக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு!
வாட்ஸாப் மீது உச்சநீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தொடரபட்டது. அதில், வாட்ஸாப் நிறுவனம் ஓர் வெளிநாட்டு நிறுவனம். இந்தியாவில் அதிகமானோர் அதனை உபயோகபடுத்துகின்றனர். மேலும் பணபரிவர்த்தனை முதற்கொண்டு வாடிக்கையாளர்களுக்கு வழங்குகிறது. ஆனால் வாட்ஸாப்பிறக்கு ஓர் அலுவலகம் கூட இந்தியாவில் இல்லை. ஓர் தலைமை அதிகாரி கூட இல்லை. ரிசர்வ் பேங்க் சட்டதிட்டங்களுக்கு வாட்ஸாப் உட்படுவதில்லை என அடுக்கடுக்கான புகார்கள் வாட்ஸாப் மீது வைக்கபட்டது.
மேலும் வெளிநாட்டு கம்பெனிகளான கூகுள், பேஸ்புக் ஆகிய நிறுவனங்கள் இந்தியாவில் அலுவலகம் வைத்திருப்பதுடன், குறைதீர்ப்பு அதிகாரிகளையும் வைத்திருப்பது குறிப்பிடதக்கது. இதனையும் அந்த வழக்கில் சுட்டிகாட்டப்பட்டது.
இதனை விசாரித்த நீதிபதி ஆகஸ்ட் மாதம் இதற்கு தீர்ப்ளித்தது. இதற்க்கு பதிலளிக்கும் வகையில் வாட்ஸாப் நிறுவனம் மின்னஞ்சல் மூலம் அனைவருக்கும் தெரியபடுத்தினார். அந்த மின்னஞ்சலில் இந்தாண்டு இறுதிக்குள் இந்தியாவில் குறைதீர்ப்பு அதிகாரியை நியமித்து விடுவதகவும், அவர் வாடிக்கையாளர்களின் குறைகளை களைபவர்களாவும், அரசாங்கத்துடன் ஒத்ததுழைப்பு தருபவராகவும் இருப்பார் என கூறப்பட்டுள்ளது.
DINASUVADU