850சிசி உடன் மிரட்டும் தோற்றத்தில் களமிறங்க போகும் ராயல் என்ஃபீல்டு!
மோட்டார் சைக்கிள் துறையில் ஒரு சிங்கம் போல மிரட்டி வருகிறது ராயல் என்ஃபீல்ட் நிறுவனம். இந்த ரக பைக்குகள் என்றாலே இளைஞர்களுக்கு ஓர் அளவுகடந்த பிரியம். அதன் மிரட்டும் தோற்றமும் அதன் சத்தமும் இளைஞர்களை அதன் பின்னால் சுத்த வைத்துள்ளது.
அந்நிறுவனம் தற்போது 850சிசி திறன் கொண்ட புதிய ரக பைக்குகளை அறிமுகம் செய்ய உள்ளது. டிரையம்ஃப் பாபர் மோட்டார்சைக்கிள் ஸ்டைல் வடிவமைக்கப்பட்ட புத்தம் புதிய பிரம்மாண்ட க்ரூஸர் வகையை சேர்ந்த பைைக்குகளை விரைவில் அறிமுகம் செய்ய உள்ளது. இந்த மாடலில்தான் 850சிசி திறன் கொண்ட என்ஜின் பயன்படுத்தபட்டுள்ளது.
இந்த புதிய 830சிசி எஞ்சினை அமெரிக்காவை சேர்ந்த போலரிஸ் நிறுவனத்துடன் இணைந்து ராயல் என்ஃபீல்டு உருவாக்கி இருப்பதாகவும் அந்த தகவல் கூறுகிறது. அதாவது, போலரிஸ் நிறுவனத்தின் கீழ் செயல்படும் இந்தியன் மோட்டார்சைக்கிள் நிறுவனத்தின் மோட்டார்சைக்கிள் மாடல்களில் பயன்படுத்தப்படும் எஞ்சின் அடிப்படையில் இந்த எஞ்சன் உருவாக்கப்பட்டு இருக்கும் என கருதப்படுகிறது.
இங்கிலாந்தில் உள்ள போலரிஸ் மற்றும் ராயல் என்ஃபீல்டு நிறுவனங்களின் ஆராய்ச்சி மேம்பாட்ட மையங்கள் இணைந்து இந்த புதிய 834சிசி எஞ்சினை உருவாக்கி இருப்பதாகவும் தெரிகிறது. இந்த புதிய எஞ்சின் லிக்யூடு கூல்டு சிஸ்டத்தை பெற்றிருக்கும். இந்த எஞ்சின் அதிகபட்சமாக 80 முதல் 90 பிஎச்பி பவரை வெளிப்படுத்தும் திறன் வாய்ந்ததாக இருக்கும்.
வருகிற 8ஆம் தேதி இத்தாலியில் உள்ள மிலன் நகரில் நடக்க இருக்கும் மோட்டார் சைக்கிள் கண்காட்சியில் இந்த புதிய மாடலை அறிமுகம் செய்ய வைக்க உள்ளது.
DINASUVADU