தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கத்தின் தலைவராக பாக்யராஜே தொடர்கிறார்…!ராஜினாமாவை ஏற்க மறுப்பு …!
பாக்யராஜின் ராஜினாமாவை ஏற்க தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கம் மறுப்பு தெரிவித்துவிட்டது.
சர்க்கார் பிரச்சனை அனைவருக்கும் தெரிந்த ஒன்று தான். இது குருத்து வருண் என்பவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.பின் இந்த வழக்கு வாபஸ் வாங்கப்பட்டுள்ளது. இதனையடுத்து தீபாவளியன்று படத்தை வெளியிடலாம் என உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
இந்நிலையில் இந்த பிரச்சனையில் வழக்கு தொடர்ந்த வருணுக்கு ஆதரவாக முடிவெடுத்தார் பாக்யராஜ்.
இன்று தென்னிந்திய எழுத்தாளர் சங்க தலைவர் பதவியில் இருந்து இயக்குநர் கே.பாக்யராஜ் ராஜினாமா செய்தார். சர்கார் படக்கதை சர்ச்சையை தொடர்ந்து திரைப்பட எழுத்தாளர் சங்க தலைவர் பதவியிலிருந்து கே.பாக்யராஜ் விலகினார்.ஆனால் இந்த மார்ச் மாதமே இவர் தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.இந்நிலையில் பதவி வகித்த 6 மாதத்தில் தந்து பதவியை ராஜினாமா செய்தார்.
அவர் அளித்த கடிதத்தில்,இயக்குநர் முருகதாஸிடம் கெஞ்சியும் உடன்படாததாலேயே, சர்கார் பட கதையை வெளியே சொல்லவேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டேன்.இதற்கு முக்கிய காரணம் தான் தேர்தலில் வெற்றி பெறாமல் வந்ததுதான் . எனவே தனது பதிவியை ராஜினாமா செய்துவிட்டு தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று பொறுப்பை ஏற்றுக்கொள்வேன் என்று தெரிவித்தார்.
இந்நிலையில் தலைவர் பதவியை ராஜினாமா செய்வதாக இயக்குநர் கே.பாக்யராஜ் தந்த கடிதம் ஏற்கப்படவில்லை என்று தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்க பொதுச்செயலாளர் மனோஜ் குமார் வெளியிட்ட அறிவிப்பில், தலைவர் பதவியை ராஜினாமா செய்வதாக இயக்குநர் கே.பாக்யராஜ் தந்த கடிதம் ஏற்கப்படவில்லை.மேலும் சங்கத்தில் உள்ள அனைவரும் பாக்யராஜ் ராஜினாமாவை மறுத்து விட்டதாக தெரிவித்துவிட்டார்.தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கத்தின் தலைவராக பாக்யராஜே தொடர்கிறார் என்றும் பொதுச்செயலாளர் மனோஜ்குமார் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.