யுவன் சங்கர் ராஜா இசையில் சிவகார்த்திகேயனின் அடுத்த பட அறிவிப்பு!
தமிழ் திரையுலகில் தற்போதுள்ள முக்கிய நடிகர்களில் ஒருவர் நடிகர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் கடைசியாக நடித்து வெளிவந்த திரைப்படம் சீமராஜா. இப்படத்திற்கு ரசிகர்களிடம் நல்ல ஓப்பனிங்கை பெற்றது. ஆனால் படத்தின் கதை ரசிகர்களை ஈர்க்காததால் படம் சுமாராக ஓடியது.
இதனை தொடர்ந்து சிவகார்த்திகேயன் அடுத்தடுத்து வெற்றிப்பட இயக்குனர்களுடன் கைகோர்த்துள்ளார். இன்று நேற்று நாளை பட இயக்குனர் ரவிக்குமார் இயக்கத்தில், ராஜேஷ்.எம் இயக்கத்தில் ஒருபடம், இரும்புத்திரை பட இயக்குனர் பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் என வரிசையாக படங்கள் வெளிவர காத்திருக்கின்றன. அதில் பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் நடிக்கப்போகும் படத்திற்கு, யுவன் சங்கர் ராஜா இசையமைக்க உள்ளார். இதில் ஜார்ஜ் ஒளிப்பதிவு செய்ய உள்ளார். அர்ஜுன் இப்படத்தில் வில்லனாக நடிக்க உள்ளார். இப்படத்தை ஆர்.டி.ராஜா தயாரிக்க உள்ளார். source : CINEBAR
DINASUVADU