கனமழை எதிரொலி …!3 மாவட்டங்களுக்கு விடுமுறை …!மாவட்ட ஆட்சியர்கள் அறிவிப்பு
கனமழை காரணமாக திருவாரூர், நாகை, புதுக்கோட்டை மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை என்று அம்மாவட்ட ஆட்சியர்கள் அறிவிப்பு வெளியிட்டுள்ளனர்.
அதேபோல் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளது என சென்னை வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்தது. சென்னை வானிலை ஆராய்ச்சி மையம் வெளியிட்ட அறிவிப்பில், கடலோர பகுதிகளில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளது. அடுத்த 24 மணிநேரத்தில் இதர பகுதிகளில் மழை இருக்கும். இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை இயல்பை விட அதிகமாக இருக்கும் .
இந்நிலையில் இன்று கனமழை காரணமாக ஒரு சில மாவட்டங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.அதில் கனமழை காரணமாக நாகை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை என்று ஆட்சியர் சுரேஷ்குமார் உத்தரவு பிறப்பித்துள்ளார்.அதேபோல் கனமழை காரணமாக புதுக்கோட்டை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை என்று ஆட்சியர் கணேஷ் உத்தரவு பிறப்பித்துள்ளார்.மேலும் திருவாரூர் மாவட்டத்தில் கனமழை காரணமாக இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை என்று ஆட்சியர் நிர்மல்ராஜ் உத்தரவு பிறப்பித்துள்ளார்.