வரம் தரும் வயலூர்….சிங்கார வடிவேல்…….கந்தசஷ்டி விழா தொடங்குகிறது…!!!

Default Image

பிரசித்தி பெற்றதும் சிறப்பு பெற்றதுமான முருகன் கோவில்களுள் திருச்சி வயலூர் முருகன் கோவிலும் குறிப்பிட்டு சொல்லக்கூடியதாகும். இத்தகைய சிறப்பு பெற்ற இக்கோவிலில் முருகன் காட்சி தருகிறார் அய்யன் முருகன் முருகன் என்றாலே தமிழ்கடவுள் என்றும் சம்ஷாரத்திற்கு பேர் போனவர் அய்யன் முருகன் தன்னை போர் புரிய வந்த சூரனையும் தன் அன்பால் மாற்றி மயிலாக மாற்றிவர் முருகன் என்று புராணங்கள் கூறுகின்றன.

Related image

இத்தகைய சிறப்பு வாய்ந்தாக  நடைபெறும் விழாக்களில் கந்தசஷ்டி விழா சிறப்பு வாய்ந்ததாகும். இந்த ஆண்டு கந்தசஷ்டி விழா வருகிற 8-ந் தேதி தொடங்கி 14-ந் தேதி வரை நடை பெறுகிறது.

வயலூரில் இவ்விழாவின் முதல் நாளான  காலை 7 மணிக்கு கணபதி ஹோமமும் சிறப்பு அபிஷேகமும்  இதனையடுத்து அய்யன் சுப்பிரமணிய சுவாமிக்கு சண்முகார்ச்சனையும் நடைபெறுகிறது. இதன் பின்னர் மாலை 6 மணிக்கு அய்யனுக்கு ரக்‌ஷா பந்தனமும் சிறப்பு அபிஷேக ஆராதனையும் நடைபெறுகிறது. இரவு சிங்காரவேலர் பச்சை மயில் வாகனத்தில் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு ஆசிர்வதிக்கும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.

Image result for வயலூர் சிங்காரவேலர்

மேலும் 9-ந் தேதி முதல் 12-ந் தேதி வரை சரியாக காலை 8 மணி அளவில் சிங்காரவேலர் கேடயத்தில் வீதி உலா வருவர் இதனையடுத்து சுப்பிரமணியசாமிக்கு லட்சார்ச்சனையும் மதியம் சண்முகார்ச்சனையும் சிறப்பாக நடைபெறுகிறது. கந்த சஷ்டி நாட்களில் இரவு 8 மணிக்கு  சிங்காரவேலர் சேஷ வாகனம் , அன்னம் வாகனம் வெள்ளிமயில் போன்ற வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்காட்சி அளிக்கிறார்.

Related image
நான்காம் நாளான 11-ந் தேதி இரவு 8 மணிக்கு சிங்காரவேலர் யானைமுக அசுரனான சூரனுக்கு பெருவாழ்வு அளிக்கின்ற கண்கவர் நிகழ்ச்சியும் 12-ந் தேதி இரவு 8 மணிக்கு சிங்காரவேலர் அசுரனான சிங்கமுக சூரனுக்கு பெருவாழ்வு அளிக்கும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.

விழாவிம் முக்கிய நிகழ்வான சூர வதம் 13-ந் தேதி காலை 9 மணிக்கு சண்முகார்ச்சனையை தொடர்ந்து 10.45 மணியளவில் சூரபதுமனை வதம் செய்வதற்கு சக்திவேல் வாங்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. சக்திவேலை பெற்று கொண்டு அய்யன் சிங்காரவேலர் போருக்கு இரவு 7.30 மணியளவில் ஆட்டுக்கிடா வாகனத்தில் எழுந்தருளி அசுரன் சூரனின் ஆணவத்தை அழித்து அசுரனுக்கு பெருவாழ்வு அளிக்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. வதத்தை தொடர்ந்து முத்துக்குமாரசுவாமி வெள்ளி கேடயத்தில் எழுந்தருளு காட்சி அளிக்கிறார்.

Related imageபோர் முடிந்து திரும்பிய அய்யனுக்கு 14-ந் தேதி காலை 9 மணிக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை மற்றும் சண்முகார்ச்சனை நடைபெறுகிறது. அய்யனுக்கு இரவு 7 மணியளவில் தேவசேனா சுப்பிரமணியசுவாமி திருக்கல்யாணம் வெகுச்சிறப்பாக நடைபெறுகிறது. பக்தர்களின் வசதிக்கு ஏற்ப செல்ல சிறப்பு பேருந்துகளும் இயக்கப்படுகின்றன. இந்தாண்டு கந்தசஷ்டி விழாவிற்கான ஏற்பாடுகளை உதவி ஆணையர் ராணி ஆலோசனையின் படி நிர்வாக அதிகாரி சுரேஷ் மற்றும் ஊழியர்கள் செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

DINASUVADU

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்