பாக்.பஸ்ஸை விட்ட சீனா…….பங்காளியை வைத்து சீண்டி பார்க்கிறதா சீனா…..!!!
பாகிஸ்தானுக்கு நாங்கள் பேருந்து போக்குவரத்து தொடங்குவதில் எங்களின் கொள்கையில் எந்த மாற்றமும் ஏற்படாது என சீனா தெரிவித்துள்ளது.
சீனா-பாகிஸ்தான் இடையே பேருந்து போக்குவரத்தை தொடங்கியுள்ளது சீனா.இந்த போக்குவரத்து ஆக்கிரமிப்பு காஷ்மீர் வழியே சீனா பாகிஸ்தான் இடையேயான பேருந்து போக்குவரத்து தொடங்கப்படும் என்று முடிவெடுக்கப்பட்டு உள்ளது. ஆனால் இந்த திட்டத்திற்கு இந்திய தரப்பில்கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வந்த நிலையில் இத் திட்டம் குறித்து சீனா வாய்திறந்துள்ளது.
இத்திட்டம் குறீத்து சீன வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் லூ கேங் தெரிவிக்கையில் காஷ்மீர் விவகாரத்தில் சீனா எப்பொழுதும் தெளிவாக உள்ளது பாகிஸ்தான் உடனான பேருந்து போக்குவரத்தினால் இந்தியா-பாகிஸ்தான் எல்லைப்புற விவகாரத்தில் ஒன்றும் ஏற்பட போவது இல்லை என்று திண்ணக்கமாக தெரிவித்த சீனா காஷ்மீர் பிரச்சனை குறித்து இந்தியாவும் பாகிஸ்தானும் பேசித் தீர்க்க வேண்டும் என்று பஞ்சாயத்து செய்யும் வகையில் தெரிவித்துள்ளது.
இந்தியா இத்திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் பட்சத்தில் நாங்கள் நிறைவேற்றியே தீருவோம் என்று அடம்பிடிக்கும் சீனா.இத்திட்டத்தால் எல்லையில் என்ன நடக்க போகிறது என்ற குழப்பத்திலும்,அச்சத்திலும் மக்கள் உள்ளனர்.
DINASUVADU