கேட்- அவுட் சொன்ன கிரிக்கெட் வாரியம்…..கட்-அவுட் வைத்து ரசிகர் வாரியம் அசத்தல்…!!
இந்தியா மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான 5வது ஒருநாள் போட்டி நாளை கேரள திருவனந்தப்புரத்தில் நடைபெற உள்ளது.தல என்று வர்ணிக்கப்படும் தோனிக்கு மைதானத்திற்கு முன் ரசிகர்கள் கட் அவுட் வைத்து அவருடைய ரசிகர்கள் அசத்தி உள்ளனர்.
கேரளாவில் நாளை திருவனந்தப்புரத்தில் நடைபெற உள்ள இந்தியா-மேற்கு இந்திய தீவுகள் இடையேயான 5 வது ஒருநாள் போட்டி நடைபெற உள்ள நிலையில் ரசிகர்களின் அன்பையும் பாசத்தையும் அளவில்லாமல் பெற்ற வீரர் தோனி இவருக்கு இந்திய அணி விளையாடும் மைதானத்திற்கு முன் ரசிகர்கள் கட் அவுட் வைத்து அவரை கவர்ந்துள்ளனர்.
இந்த கட் அவுட் 35 அடி உயரம் ஆகும் சினிமா ஹீரோக்களுக்கு வைப்பது தான் வழக்கம் அதனை உடைத்து தோனிக்கு அவருடைய கட் அவுட் வைத்துள்ளனர். மைதானத்திற்கு முன் கிரிக்கெட் வீரர்க்கு கட் அவுட் வைப்பது இதுவே முதல் முறை ஆகும்.
கேரள மாநிலத்தில் உள்ள ஆல் கேரளா டோனி பேன்ஸ் அசோசியேசன் என்ற பெயரில் ரசிகர்கள் செயல்பட்டு வருகின்றனர். திருவனந்தபுரம் வந்துள்ள டோனியை பாராட்டும் வகையில் ஆல் கேரளா டோனி பேன்ஸ் அசோசியேசன் சார்பில் 35 அடி உயர கட்அவுட் வைத்து அசத்தியுள்ளனர்.
#Thala's Vishwaroopam getting ready at Trivandrum! #WhistlePodu #INDvWI ???????? #Yellove from @AKDFAOfficial! pic.twitter.com/AL8hxZ6DWz
— Chennai Super Kings (@ChennaiIPL) October 31, 2018
தோணியை அணியிலிருந்து கேட் அவுட் சொன்ன கிரிக்கெட் வாரியத்திற்கு பதிலடியாக தோணிக்கு கட் அவுட் வைத்து தங்களின் ஏகோபித்த அன்பையும் கிரிக்கெட் தேர்வுக்குழு வாரியத்திற்கு எதிர்ப்பையும் தெரிவித்து.கேரளா வந்த இந்திய அணியின் மற்ற வீரர்களை வாயை பிளக்கும் வகையில் அசத்தியுள்ளனர் ரசிகர்கள்.
#akdfa #akdfacutout #35ftcutoutforMSD #cutoutofdhoni #keralacutout #allkeraladhonifansassociation @msdhoni @SaakshiSRawat @ChennaiIPL @BCCI @cricbuzz @StarSportsIndia pic.twitter.com/OFRUnZvmVT
— All Kerala Dhoni Fans Association(AKDFA) (@AKDFAOfficial) October 31, 2018
DINASUVADU