மத்திய அரசை ஆட்டிய…….மற தமிழனின் கீழடி அகழாய்வு……!!மறைக்கும் மத்திய அரசு……மீண்டும் அமர்நாத்…!!!

கீழடி அகழாய்வுத் தலைவராக இருந்தவர்  அமர்நாத் இவர் கீழடி ஆய்வுகளில் தலையிட கூடாது என்பதற்காக மத்திய அரசால் அதிரடியாக இடம் மாற்றம் செய்யப்பட்டார்.
Image result for கீழடி
கீழடியில் முதல் 2 கட்ட அகழாய்வு அறிக்கையை அளிக்க அமர்நாத் ராமகிருஷ்ணனுக்கு அனுமதி வழங்கி நாங்கள் அரசாணை வெளியிட்டுள்ளோம் எஎன்று உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது. மேலும் 3ஆம் கட்ட அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட பொருட்கள் அனைத்தும் கார்பன் சோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது என்று தெரிவித்தது மத்திய அரசு.மேலும் விசாரித்த உயர்நீதிமன்ற கிளை கீழடி அகழாய்வு அறிக்கையை தமிழக தொல்லியல் துறையிடம் கொடுக்க உத்தரவிட்டு வழக்கை 7 மாதங்களுக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டது.
Related image
யார் இந்த அமர்நாத்  தமிழ் நாகரித்தை உலகிற்கு வெளிகொண்டு வர முழுமூச்சாக பணியாற்றியவர்.
இவர் நடத்திய சிவகங்கை மாவட்டம் கீழடி ஆய்வு இந்த ஆய்வு நதிக்கரை நாகரிகம் பற்றி இந்திய தொல்லியல்துறை கடந்த 2015-ம் ஆண்டு முதல் த்னது ஆய்வுகளை ஆரம்பித்தது. இந்த அகழாய்வை தொல்லியல்துறை அகழாய்வு பெங்களூரு பிரிவு கண்காணிப்பாளர் கே.அமர்நாத் ராமகிருஷ்ணன் தலைமையில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. சிறப்பாக செயல்பட்டு வந்த நிலையில் தொல்லியல் துறை இயக்குநர் அமர்நாத்தை அதிரடியாக மத்திய அரசு மாற்றி அவரை அசாமிற்கு இடமாற்றம் செய்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
Related image
இந்நிலையில் கீழடியில் அவருக்குப் பதிலாக ஸ்ரீராமன் என்பவரை நியமித்தது மத்திய அரசு இது தமிழக மக்களின் எதிர்ப்பை சம்பாதித்து கொண்டது மத்திய அரசு.மேலும் இந்த இடமாற்றத்திற்கு  பல்வேறு தரப்பினர் எதிர்ப்புத் தெரிவித்து வந்தநிலையில்  சென்னையைச் சேர்ந்த கனிமொழி  மதி என்கிற வழக்கறிஞர்  அமர்நாத்தை மீண்டும் கீழடி அகழாய்வுக்கு பணியமர்த்த வேண்டும் என்று கோரி, உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு ஒன்றை தொடர்ந்தார்.
Related image
இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதிகள் செல்வம், ஆதிநாதன் கொண்ட அமர்வு கேள்விகளை கேட்டு குடைந்தது. கீழடியில் தொல்லியல் அதிகாரியை இடமாற்றம் செய்தது ஏன்  என்று கேட்டது இதற்கு சரியான பதிலை அளிக்கமுடியாமல் விக்கி திணறியது மத்திய அரசு.
Image result for கீழடி
ஆய்வு பயணித்து வந்த பாதை…இந்த ஆய்வானது தொல்லியல் ஆய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன் தலைமையில் மதுரை அருகே கீழடியில் இந்திய தொல்லியல் துறை சார்பில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. பழமையும் பெருமையும் மதுரையின் அடையாளமாக உள்ள வைகை.பெருமை வாய்ந்த வைகை நதி நாகரிகத்தின் அடையாளங்களைக் கண்டறிந்தார் அமர்நாத் இந்த ஆய்வில் கண்டறியப்பட்டவை எல்லாம் வரலாற்றுப் பெட்டகங்கள் உண்மை தன்மை மாறாமல் அப்படியே உள்ளது அனைவரயும் அச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.இந்த ஆய்விலும் அரசியல் நுழைந்தது. தமிழரின் வராலாற்று சுவடுகளை தமிழர்களுக்கு கண்ணில் காட்டாமல் மூடி மறைத்துவிட மத்திய மோடி அரசு முயற்சி செய்தது.
Image result for கீழடி
அதற்கு முன்னோட்டமாகவே கீழடி தொல்லியல் தலைவராக இருந்த அமர்நாத்தை இடமாற்றியது இதில் இருந்து அறியலாம் என்று பொதுமக்களும்,அரசியல் கட்சிகளும் குரல் கொடுத்தது விமர்சித்து வந்த நிலையில் இந்த விழர்சனங்கள் மூலம் வராலாற்று பெட்டகமான கீழடி ஆய்வு வெளிச்சத்திற்கு வந்தது.கீழடி அகில இந்திய அளவில் மட்டுமின்றி உலக அளவிலும் இந்த தொல்லியல் ஆய்வு வரலாற்றில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.
Related image
கீழடியை தமிழகமே பெருமிதம் கொண்டு மேலும் ஆய்வுகள் தொடர்ந்து நடத்தப்படவேண்டும் என்று கோரியது. ஆனால் தொடர்ந்து இந்த ஆய்வுப் பணியை முழுவீச்சில் மேற்கொண்ட அமர்நாத் ராமகிருஷ்ணனை மோடி அரசு அசாமுக்கு மாற்றியது.
Image result for கீழடி
மாற்றப்பட்ட அவரை அங்கே அகழாய்வுப்பணி ஒதுக்காமல் கண்டெடுக்கப்படும் சின்னங்களைப் பராமரிக்கும் பணியைக் கொடுத்துப் பழிவாங்கும் போக்கை கடைபிடித்தது மத்திய அரசு.மற தமிழனின் பராம்பரிய சான்றுகளை தமிழனின் கண்ணில் இருந்து எளிதாக மறைக்க மத்திய அரசால் முடியாது.
Related image
மார்தட்டி கொள்ளும் மத்திய அரசு இதை நினைவில் வைத்து கொள்ள வேண்டும் தமிழ் தமிழர் அடையாளம் என்பதை……… எந்த கேடியாலும் எதுவும் செய்ய முடியாது. என்பதை…என்று தமிழ் ஆர்வலர்களும் தமிழ் அமைப்புகளும் குரல் கொடுத்து வருகின்றனர்.
DINASUVADU

author avatar
kavitha

Leave a Comment