நவ.2ம் தேதி வரை கனமழை பெய்ய வாய்ப்பு : வானிலை ஆய்வு மையம்
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நவ.2ம் தேதி வரை கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் ஒருசில இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. நவ.3 மற்றும் 4ம் தேதிகளில் மலை பெய்வதற்கான வாய்ப்பில்லை என அறிவித்துள்ளது. வடகிழக்கு பருவமழை பெய்வதற்கு சாதகமான சூழ்நிலை நிலவுவதாக கூறியுள்ளனர்.