உடம்பில் உள்ள சளி ஒரே நாளில் போக வேண்டுமா…? அப்ப இதை செய்து பாருங்க…!!!
தற்போது மழை காலம் என்பதால் அதிகமானோர் சளி தொல்லையால் கஷ்டப்படுவார்கள். இதில் இருந்து விடுதலை பெறுவதற்கு பல மருந்துகள் சாப்பிட்டாலும் குணமடையாமல் இருக்கிறீர்களா? இதை செய்து குடித்து பாருங்கள். ஒரே நாளில் மாற்றத்தை காண்ப்பீர்கள்.
தேவையான பொருட்கள் :
- எலுமிச்சை பழம் – 3
- தண்ணீர் – 2 டம்ளர்
- உப்பு – சிறிதளவு
- சீனி – 2சிட்டிகை
செய்முறை :
மூன்று பழுத்த எலுமிச்சை பழங்களை எடுத்து, அதில் இரண்டு பழங்களை பாதியாக வெட்டி ஒரு பாத்திரத்தில் போட்டு அதில் தண்ணீர் ஊற்றி அதில் தேவையான அளவு உப்பு போட்டு நன்கு கொதிக்க வைக்க வேண்டும். நன்றாக கொதித்த பிறகு மீதியுள்ள எலுமிச்சை பழத்தையும் பிழிந்து அந்த நீரை ஒரு கப்பில் எடுத்து சிறிதளவு சீனி சேர்த்து கொள்ள வேண்டும். பின்னர் ஓரளவு சூட்டுடன் இரவு தூங்க செல்வதற்கு அரைமணி நேரத்திற்கு முன்பு குடிக்க வேண்டும்.
பயன்கள் :
இதை பருகுவதால் நாம் உறங்கிய பின்னர் உடம்பில் உள்ள சளி வியர்வையாக மாறி வெளியேறிவிடும்.
source : tamil.trendstime.in