அமெரிக்கா நீதிபதியாக இந்திய பெண்….டிரம்ப் நேர்காணல்…!!

Default Image

பிரெட் கவனாக் இந்தப் பதவிக்கு வருவதற்கு முன்பாக  வாஷிங்டன் மாகாணத்தில் கொலம்பியா மாவட்ட அப்பீல் கோர்ட்டில் நீதிபதியாக இருந்தார்.அவர் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதியாகி விட்டதால், கொலம்பியா மாவட்ட அப்பீல் கோர்ட்டில் ஒரு நீதிபதி பதவி காலியாக உள்ளது.இந்த காலி இடத்துக்கு பரிசீலிக்கப்படுகிறவர்களில் ஒருவர், இந்திய வம்சாவளி பெண்ணான நியோமி ஜகாங்கிர் ராவ் (வயது 45) ஆவார்.இவரிடம் சமீபத்தில் ஜனாதிபதி டிரம்ப் நேர்காணல் நடத்தி முடித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இவர் தற்போது அங்கு தகவல் மற்றும் ஒழுங்குமுறை விவகாரங்கள் அலுவலகத்தின் நிர்வாகியாக உள்ளார். இந்தப் பதவியில் இவரது நியமனத்துக்கு செனட் சபையில் நடந்த ஓட்டெடுப்பில் ஆதரவாக 54 ஓட்டுகளும், எதிராக 41 ஓட்டுகளும் விழுந்தது நினைவுகூரத்தக்கது.இவரை அப்பீல் கோர்ட்டு நீதிபதியாக நியமிப்பதில் டிரம்ப் ஆர்வம் கொண்டிருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.
இவர் பார்சி இன இந்திய பெற்றோருக்கு மகளாக பிறந்தவர் ஆவார். அமெரிக்காவில் புகழ் பெற்ற ஏல் பல்கலைக்கழகம் மற்றும் சிகாகோ பல்கலைக்கழகத்தில் படித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.இவர் அமெரிக்காவில் ஆலன் லெப்கோவிட்ஜ் என்பவரை திருமணம் செய்து கொண்டுள்ளார். இந்த தம்பதியருக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.
dinasuvadu.com 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்