ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி தலைவருக்கு கத்திக்குத்து…!!
ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி தலைவர் ஜெகன்மோகன் ரெட்டியை விசாகப்பட்டினம் விமான நிலையத்தில் சீனிவாஸ் (வயது 20) என்பவர் கத்தியால் 25–ந் தேதி குத்தினார்.
ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி தலைவர் ஜெகன்மோகன் ரெட்டியை விசாகப்பட்டினம் விமான நிலையத்தில் சீனிவாஸ் (வயது 20) என்பவர் கத்தியால் 25–ந் தேதி குத்தினார். இதில் ஜெகன்மோகன் ரெட்டியின் தோள்பட்டையில் காயம் ஏற்பட்டது.
இது தொடர்பாக சீனிவாசை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவரை போலீஸ் காவலில் எடுத்து போலீசார் விசாரித்து வந்தனர்.
இந்நிலையில் அவருக்கு திடீரென நெஞ்சு வலி மற்றும் தோள்பட்டை வலி ஏற்பட்டது. இதையடுத்து அவர் விசாகப்பட்டினம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
dinasuvadu.com