பெட்ரோல் , டீசல் விலை குறைகிறதா…? GST_க்குள் பெட்ரோல் , டீசல்…அமைச்சர் தகவல்…!!
பெட்ரோல், டீசலை ஜி.எஸ்.டி.யில் கொண்டு வர ஆலோசனை நடைபெற்று வருவதாக, மத்திய மந்திரி தகவல் தெரிவித்துள்ளார்.
பெட்ரோல், டீசலை ஜி.எஸ்.டி.யில் கொண்டு வர ஆலோசனை நடைபெற்று வருவதாக, மத்திய மந்திரி ராம்தாஸ் அத்வாலே தெரிவித்துள்ளார். இது குறித்து சண்டிகாரில் செய்தியாளர்களிடம் இன்று அவர் கூறியதாவது:–
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு பெட்ரோல், டீசலை ஜி.எஸ்.டி. வரம்புக்குள் கொண்டு வர ஆலோசனை நடத்தி வருகிறது. இதில் பல்வேறு பிரச்சினைகள் உள்ளன. எனினும் இதற்கான நடவடிக்கையை தீவிரப்படுத்தி வருகிறோம்.
ஜி.எஸ்.டி. வரம்பில் பெட்ரோல், டீசலை கொண்டு வருவதன் மூலம் ரூ.20 முதல் ரூ.30 வரை விலை குறையும். இது நடுத்தர மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். மாநில அரசுகளும் பெட்ரோல், டீசலுக்கான தங்கள் வரியை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தற்போது பெட்ரோல், டீசல் விலை சற்று குறைந்து வருவது ஆறுதல் அளிக்கிறது.
ரபேல் விவகாரத்தில் எந்த முறைகேடும் நடக்கவில்லை. இது குறித்து காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி பொய் பிரசாரம் செய்து வருகிறார். வரும் நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதா கூட்டணி 400–க்கும் மேற்பட்ட இடங்களை கைப்பற்றும். பா.ஜனதா கட்சி மட்டுமே 300–க்கும் அதிகமான இடங்களை பிடிக்கும். காங்கிரஸ் கட்சிக்கு 70 இடங்களே கிடைக்கும் என்று அவர் கூறினார்.
dinasuvadu.com