தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு : சென்னை வானிலை ஆய்வு மையம்
கடந்த சில நாட்களுக்குமுன்பதாக வங்க கடலில் லூபான், டிட்லி என இரு புயல்கள் உருவானதால் வடகிழக்கு பருவமழை தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இலங்கை அருகே வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் காற்றழுத்தம் உருவாகியுள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. மேலும் வடகிழக்கு பருவமழை நவ.1ம் தேதி முதல் தொடங்க வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.