மாணவர்கள் வெடியை பாதுகாப்பாக கையாள விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்….!!!
தீபாவளியை முன்னிட்டு, பள்ளி மாணவ மாணவிகள் பாதுகாப்பாக வெடியை வெடிக்க சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. அனைத்து பள்ளி ஆசிரியர்களுக்கும் பள்ளி கல்வி இயக்குனர் ராமேஸ்வர முருகன் சுற்றறிக்கை விடுத்துள்ளார். பாதுகாப்பாக வெடி வெடிப்பது குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை ஒரு வாரம் நடத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.