தேர்தல்களில் அதிமுகவுடன் கூட்டணியா என்பதை தேர்தல் வரும்போது பார்ப்போம்…!மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்
18 எம்எல்ஏக்கள் நீக்கப்பட்டதற்கும் மத்திய அரசுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறுகையில், 18 எம்எல்ஏக்கள் நீக்கப்பட்டதற்கும் மத்திய அரசுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை .இலங்கையில் 1.5 லட்சம் தமிழர்கள் கொல்லப்பட்டபோது கழகங்கள் எங்கு சென்றிருந்தது.தேர்தல்களில் அதிமுகவுடன் கூட்டணியா என்பதை தேர்தல் வரும்போது பார்ப்போம்.பிற நாட்டு தலைவர்கள் இந்தியா வருவது வழக்கமானது, இதில் சந்தேகப்படுவதற்கு எதுவும் இல்லை என்றும் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.