என்ன சாதனை…. இத செய்யட்டும் கோலி..! பாக்.முன்னாள் வீரர் பகீரங்க சவால்……ஏற்றப்பாரா சாதனை நாயகன் விராட்…!!

Default Image

இந்திய அணி கேப்டனும் கிரிக்கெட்டில் அதிரடி சாதனை செய்து கிரிக்கெட்டை கலக்கி வரும் விராட்டுக்கு  பாக்.முன்னாள் வீரர் சவால் விடுத்துள்ளார்.
Image result for virat kohli
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட வெஸ்ட் இண்டீஸ் இந்தியாவுடன் டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் பங்கேற்க வந்தது டெஸ்ட் முடிந்த நிலையில் ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது.இந்த ஒருநாள் போட்டியானது கவுகாத்தி, விசாகப்பட்டினம் மற்றும் புனே ஆகியவற்றில் நடைபெற்றது இந்த மூன்று போட்டிகளிலும் இந்திய அணி கேப்டன் விராட் கோலி சதம் அடித்தார்.
Related imageஇந்த ஒருநாள் போட்டிகளில் மூன்று சதங்களை முத்தமிட்ட கோலி ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 38 சதங்களை பதிவு செய்தார்.மேலும் டெஸ்ட் போட்டியில் 24 சதங்கள் அடித்ததுள்ளது குறிப்பிடத்தக்கது.இந்த இரண்டையும் சேர்த்த ஒட்டுமொத்தமாக 62 சதங்களை கிரிக்கெட்டில் முத்தமிட்டுள்ளார்.கிரிக்கெட் உலகில் 38 சதங்கள் அடித்துள்ள விராட் கோலிக்கு கிரிக்கெட் விரும்பிகள், முன்னாள் வீரர்கள் பாராட்டுக்களை கொட்டி வருகின்றனர்.
Related image
இதற்கிடையே பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான சோயிப் அக்தர் சாதனை நாயகன் விராட் கோலிக்கு டுவிட்டரில் தனது பங்கிற்கு பாராட்டுக்களை தெரிவித்தார்.பாராட்டு தெரிவித்ததோடு மட்டுமல்லாமல் புது சவாலும் போட்டுள்ளார்.அதில் தொடர்ச்சியாக மூன்று ஒருநாள் போட்டிகளில் சதம் அடித்து, எந்தவொரு இந்திய பேட்ஸ்மேனும் செய்யாத சாதனையை கேப்டன் விராட் கோலி செய்துள்ளார். விராட் சிறந்த ரன் மெஷின். இந்த விளையாட்டை அப்படியே அதிகாரித்து 120 சதங்கள் அடிக்கனும். இதை உங்களுக்கு இலக்காக அமைத்துள்ளேன் என்று 120 சதத்தை கோலி அடிக்கவேண்டும் இது என்னுடைய சவால் என்று தெரிவிக்கும் வகையில் பதிவிட்டுள்ளார்.
Image result for shoaib akhtar
கோலிக்கு சவால் என்றால் அல்வா போல் அப்படியோ சாப்பிடக்கூடியவர் இதற்கு எடுத்துக்காட்டாக இந்திய பிரதமரையை சவால் மூலம் வம்மிலுத்தவர் இந்த சவாலை ஏற்று பிரதமர் மோடியும் செய்துகாட்டினார்.
Related image
இந்நிலையில் சவால் மன்னனுக்கே சவால என்று ரசிகர்கள் பாக்.முன்னாள் வீரர் சோயிப் அக்தர்க்கு கேள்விகளை சமூக வலையதலங்களில் தெரிவித்து வருகின்றனர்.இந்த சவாலையும் எங்கள் கோலி முறியடிப்பார் என்று வெற்றி முழக்கத்தையும் முழங்கி வருகின்றனர்.இந்த சவாலை சாதனை நாயகன் சாதிப்பாரா என்று பொறுத்து இருந்து பார்ப்போம்.
Image result for virat kohli
DINASUVADU
 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்