கதை திருட்டா….?சர்கார் எப்படி உருவானது தெரியுமா……உண்மையை உடைத்த வசனகர்த்தா…!!

Default Image
நடிகர் விஜய் நடிகை கீர்த்தி சுரேஷ் ஏ ஆர் முருகதாஸ் ஏ ஆர் ரகுமான் சன்பீக்சர்ஸ் தயாரித்து பிரம்மாண்டமாக உருவாக்கியிருக்கும் படம் சர்கார்.

இந்த படத்தில் டீசரிலே படத்தை எப்படியாவது பார்க்க வேண்டும் என்ற எண்ணத்தை ரசிகர்களிடையே ஏற்படுத்தியுள்ளது.படத்தின் போஸ்டர்கள் சும்மா தெறிக்கவிட பட்டது.இப்படி சாதனை பதித்து வந்த சர்கார் சிறிது சறுக்கலையும் சந்தித்துள்ளது.அந்த சறுக்கல் என்னவென்றால் சர்க்கார் பட கதை திருட்டு என்ற பெரிய குண்டை வருண் என்பவர் போட்ட அவர் அவசர வழக்கையும் ஏற்க வேண்டும் என்று சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தார் இது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

தற்போது சர்கார் திருட்டு கதை என்ற சர்ச்சையை சந்தித்த சர்கார் குறிப்பிட்ட அந்த நாளில் வெளியாகும் என்று படக்குழு உறுதியாக தெரிவித்தது.ஆனால் சென்னை உயர்நீதிமன்றம் வரும் 31 தேதிக்குள் திரைப்பட எழுத்தாளர் சங்கம் மற்றும் தயாரிப்பு நிறுவனம் பதிலளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு வழக்கை தள்ளிவைத்தது. இந்நிலையில் படத்தின் வசன கர்த்தாவான ஜெயமோகன் இந்த விவகாரம் பற்றி பேசியுள்ளார்.அதில் நான் இதுவரை பணியாற்றிய படங்களிலே இந்த படத்திற்கு தான் அதிகமான உழைப்பை கொடுத்துள்ளேன்.அரசியல் ரீதியாக யோசித்து இந்தப் படத்தை கொண்டு போக விவாதித்து உருவாக்கப்பட்டது.

இதற்காக சென்னையில் ஒன்றரை மாதம் தங்கி இரவு, பகல் என ஒவ்வொரு விசயத்தையும் மிகவும் விவாதித்து தான் எழுதினேன்.அது என்னவென்றால் நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் ஓட்டை திருடி யாரோ போட்டு விட்டார்கள் என்ற ஒன் லைன் கதையை வைத்து தான் சர்கார் என்கிற முழுபடத்தையும் எடுத்துள்ளோம்.    இந்த படத்தில் நடிகர் விஜய் இப்படத்தில் ஒரு கார்ப்பொரேட் கம்பெனியின் CEO என்ற கேரக்டர் செட்டாகும் படிதான் இந்த கதை உருவாக்கப்பட்டுள்ளது.

ஒன்றை நடிகர் சிவாஜி விஷயத்தில் நடந்ததை நினைத்தால் இது முன்பே வந்துவிட்டது, காப்பி என சொல்லிவிடுவார்களோ? என்ற யோசனையும் நடைமுறை சினிமாவிலும் நடக்கும் படி இருக்க வேண்டும் எதோ புதுமையாக செய்து புரியாமல் போய் விடக்கூடாது.இன்னும் சொல்லனும்மனா  கதை எழுத,விவாதிக்க தொடங்கிய  4 நாட்கள் அவரை இதே ஒன்லைன் ஸ்டோரி தான் இருந்தது.அதன் பின்னர் தான் படத்தின் முதல் காட்சியை பிடித்துவிட்டு மற்றதை பார்த்து செய்துள்ளோம் என நம்பிக்கை பட கூறினார் .  மேலும் தெரிவித்த அவர் ஒருலைன் இருந்தால் போதும் நடிகர் விஜய்யை வைத்து ஒரு படத்தையே உருவாக்கிவிடலாம்.மற்றபடி கதை திருட்டு என்று சொல்வதெல்லாம் சமூகத்தின் வணிக வியாபாரம் என்று கதை திருட்டுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

எழுத்தாளர் ஜெயமோகன்
DINASUVADU

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்