தல டோனியை விரட்டியடித்த கோலியின் சாதனை…!!

Default Image

ஒருநாள் போட்டியில் அதிக ரன் எடுத்த இந்திய வீரர்களில் மகேந்திர சிங் டோனியின் சாதனையை விராட் கோலி இன்று முறியடித்துள்ளார்.

இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான ஒருநாள் கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைபெற்று வருகிறது.
கவுகாத்தியில் நடந்த முதல் ஒருநாள் போட்டியில் இந்தியா 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 323 ரன் இலக்கை எடுத்து முத்திரை பதித்தது.விசாகப்பட்டினத்தில் நடந்த 2-வது ஆட்டம் வெற்றி-தோல்வியின்றி ‘டை’ ஆனது. வெஸ்ட் இண்டீஸ் 321 ரன்னை எடுத்து ‘டை’ செய்து பாராட்டை பெற்றது.இன்று நடைபெறும் 3-வது போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி பெற்றது.
இதில் ஒருநாள் போட்டியில் அதிக ரன் எடுத்த இந்திய வீரர்களில் 5-வது இடத்தில் இருந்த இந்திய அணி கேப்டன் விராட் கோலி மகேந்திர சிங் டோனி 273 இன்னிங்ஸ் விளையாடி 10,143 ரன் எடுத்து வைத்திருந்த சாதனையை இந்திய அணி கேப்டன் விராட் கோலி இந்திய அணி 27 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 142 ரன்கள் எடுத்திருந்த போது முறியடித்தார்.
விராட் கோலி 68 ரன்கள் அடித்து டோனியின் சாதனையை முறியடித்தார். ஒருநாள் போட்டியில் அதிக ரன்கள் எடுத்த இந்திய வீரர்கள் பட்டியலில் விராட் கோலி நான்காவது இடத்துக்கு முன்னேறினார்.தெண்டுல்கர் 18,426 ரன்னுடன் முதல் இடத்திலும், கங்குலி 11,363 ரன்னுடன் 2-வது இடத்திலும், டிராவிட் 10,405 ரன்னுடன் 3-வது இடத்திலும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
dinasuvadu.com 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்