தலைவன் தோனி இல்லாமல் ஆணியை கூட புடுங்க முடியாது……..கொதித்தெழுந்த ரசிகன்_ இயக்குநர்…!!!

Default Image
வெஸ்ட் இண்டீஸ் மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு எதிரான டி20 தொடர்களில் இருந்து தோனி நீக்கப்பட்டதற்கு பல தரப்புகளிடம் இருந்து எதிர்ப்புகள் கிளம்பியுள்ளது.
Related image
இந்திய அணி மற்றும்  வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒருநாள் தொடரை  முடிந்ததுமே டி20 தொடர் தொடங்க உள்ளது.இந்த டி20 தொடரானது மூன்று போட்டிகள் கொண்ட நிலையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடருக்கான இந்திய அணியையும் தேர்வுக்குழு அறிவித்தது. இந்த அறிவிப்பு ரசிகர்களுக்கு இடியாய் வந்தது காரணம் என்னவென்றால் தேர்வுக்குழு அறிவித்த இந்திய அணி வீரர்கள் பட்டியலில் முன்னாள் கேப்டனும்,ரசிகர்களின் ஃபேவ்ரட் கிரிக்கெட் வீரருமான தோனியின் பெயர் இடம்பெறவில்லை இது அவருடைய ரசிகர்கள் மத்தியில் அளக்கமுடியாத அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.மேலும் தொடர்ந்து தோணி 6 தொடர் கொண்ட போட்டிகளில் அவருக்கு ஒய்வு அளிக்கப்பட்டுள்ளது.அதேபோல் இந்த தொடரிலும் இருந்தும் அவருக்கு ஓய்வுதான் தான் கொடுக்கப்பட்டுள்ளது.ஆனால் அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக நேற்று நடந்த போட்டியில் தோணி டைவ் கேட்ச் பிடித்து தேர்வுக்குழுவை முக்கின் மீது விரல் வைக்கவைத்தார்.
Image result for dhoni
ரசிகர்களின் கடும் எதிர்ப்பை சம்பாதித்த தேர்வுக்குழு தானாக இது குறித்து வாய்திறந்தது அப்படி அந்த தேர்வுக்குழு என்ன கூறியது என்றால்  2-வது விக்கெட் கீப்பரின் இடத்தை நிரப்ப இந்த முடிவு எடுக்கப்பட்டது.
Related image
அவரை நீக்கியது அவருக்கு ஓய்வு கொடுக்கத்தான் என்று மழுப்பளான பதிலை தெரிவித்தது இதுமட்டும் தெரிவிக்கவில்லை 20 ஓவர் போட்டியில் தோனியின் எதிர்காலம் இன்னும் முடியவில்லை என்று அவருடைய ரிட்டேர் பற்றியும் தெரிவித்தது.இந்த தேர்வுக்குழு என்ன தான் விளக்கம் கொடுத்தாலும் 6 போட்டிகளில் கொண்ட தொடரில் தோனிக்கு ஓய்வு கொடுத்துள்ளதா? இல்லை இது ஓய்வா அல்லது ஓரங்கட்டபடுதலா…? என்ற எதிர்ப்பு  கேள்வியையும் ரசிகர்கள் முன்வைத்து தேர்வுக்குழுவையும் ஒருபுறம் பிசிசிஐ-யையும் இன்னொரு புறம் தேர்வுத்தலைவர் பிரசாத்தையும் சமூக வளையதளங்களில் கிழித்தெடுக்கின்றனர்.
Image result for dhoni
 
மேலும் இந்த ஓய்வை அறிந்த ரசிகர்கள் கொதிப்படைந்து பதிவுகளை பறக்க விட்டு வருகின்றனர் அதில் ஆயிரம் சச்சின்கள், கோலிகள் வந்தாலும் தோனி போல் வருமா என்று தங்கள் ஆதங்கத்தைக் கொட்டித் தீர்த்துள்ளனர் இந்த கொதிப்பிற்கு கூடுதல் சேர்க்கும் விதமாக திரைத்துறையிலிருந்தும் தோனிக்காக குரல் ஒலித்துள்ளது.
Image result for vignesh shivan-DHONI
டி20 தொடரிலிருந்து தோனி நீக்கம் குறித்து  இயக்குநர் விக்னேஷ் சிவன் தனது ட்விட்டர் பக்கத்தில் இதயம் நொறுங்கியது. தலைவன் தோனி இல்லாமல் ஒரு டி20 அணியா? மோசமான அணித்தேர்வு மற்றும் தேர்வுகுழு,பிசிசிஐ உங்களை ஆண்டவன் தான் காப்பாற்றணும். தலைவன் தல தோனி இல்லாமல் நீங்கள் ஆணியக் கூட புடுங்க முடியாது. என்பதை முதலில் தெரிந்துக் கொள்ளுங்கள் என்று கொதித்தெழுந்து தனது பதிவால் தேர்வுக்குழுவை கடுமையாக வறுத்தெடுத்துள்ளார் விக்னேஷ் சிவன்.
DINASUVADU

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்