20 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் வந்தால் மக்கள் நீதி மய்யம் போட்டியிடும் ..!நாங்க தேர்தலை சந்திக்க ரெடி …!கமல்ஹாசன் அதிரடி
20 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் வரும் போது மக்கள் நீதி மய்யம் தேர்தலை எதிர்கொள்ளும் என்று மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
நடிகர் கமல்ஹாசன் பிப்ரவரி மாதம் 21-ந் தேதி மக்கள் நீதி மய்யம் கட்சியைத் தொடங்கினார். மதுரையில் நடந்த பொதுக்கூட்டத்தில் கட்சியின் பெயர், கொடி ஆகியவற்றை அறிவித்தார்.
மக்கள் நீதிமைய்யம் தலைவர் கமல்ஹாசன் சமீப காலமாக தனது அரசியல் பயணத்தை தொடர்ந்து அதிகரித்து வருகிறார்.
இதேபோல் அவர் கட்சிகளையும் நேரடியாகவும் சாடி வருகின்றார்.நடிப்பிலும் பிக் பாஸ் 2 விலும் கவனம் செலுத்தி வந்தாலும் அவ்வப்போது சமூக வலைதளங்களிலும் கருத்துகளை பதிவிடுகிறார்.
இந்நிலையில் இன்று சென்னை ஆழ்வார் பேட்டையில் செய்தியாளர்களிடம் பேசிய மக்கள் நீதிமைய்யம் தலைவர் கமல்ஹாசன்,20 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் வரும் போது மக்கள் நீதி மய்யம் தேர்தலை எதிர்கொள்ளும்.இடைத்தேர்தல் வந்தால் மக்கள் நீதி மய்யம் சந்திக்க தயாராக உள்ளது .அதேபோல் ராஜபக்சே இலங்கை பிரதமரானதை வரவேற்கவில்லை. இலங்கையில் முன்பு செய்த தவறை ராஜபக்சே செய்யமாட்டார் என நம்புவோம் என்றும் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.