ஓய்வால் ஓரங்கட்ட படுகிறா..??தோனி….!!ஓரம் கட்டுகிறீர்கள்……தேர்வுக்குழுவை தேய்து எடுத்த ரசிகர்கள்…!!
வெஸ்ட் இண்டீஸ் மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடருக்கு இந்திய அணியில் தோனி இடம்பெறாதது குறித்து தேர்வுக்குழு தலைவர் விளக்கம் அளித்துள்ளார்.
இந்திய அணி வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒருநாள் தொடர் தற்போது முடிந்ததுமே டி20 தொடங்க உள்ளது.இந்த டி20 மூன்று போட்டிகள் கொண்டது.மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடருக்கான இந்திய அணியும் நேற்று அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பு ரசிகர்களுக்கு அதிர்ச்சி தரும் விதத்தில் அமைந்தது இந்திய அணி வீரர்கள் பட்டியலில் முன்னாள் கேப்டன் தோனியின் பெயர் இடம்பெறவில்லை இது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
முன்னாள் கேப்டன் தோனி இந்திய அணி விளையாடிய 104 டி20 போட்டிகளில் 93 போட்டிகளில் விளையாடி உள்ளார். இந்நிலையில் அவர் திடீரென நீக்கப்பட்டது பெரும் குழப்பத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது.
முன்னாள் கேப்டன் மகிந்திர சிங் தோனி டி20 போட்டிகளில் நீக்கம் தொடர்பாக விளக்கம் அளித்துள்ள தேர்வுக்குழு தலைவர் பிரசாத் தோனி அணியில் இருந்து நீக்கம் செய்யப்படவில்லை.போட்டிகளில் இருந்து அவருக்கு ஓய்வுதான் தான் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் 2-வது விக்கெட் கீப்பரின் இடத்தை நிரப்ப இந்த முடிவு மேற்கொள்ளப்பட்டது.இந்த நீக்கம் தோனிக்கு ஓய்வு தான் கொடுக்கப்பட்டுள்ளது. டி20 ஓவர் போட்டியில் தோனியின் எதிர்காலம் இன்னும் முடியவில்லை என்று தெரிவித்தார் தேர்வுக்குழு என்ன தான் விளக்கம் கொடுத்தாலும் 6 போட்டிகளிலும் தோனிக்கு ஓய்வு கொடுப்பதா? இது ஓய்வா அல்லது ஓரங்கட்டபடுதலா…? என்ற கேள்வியையும் ரசிகர்கள் முன்வைத்துள்ளனர்.
மேலும் 2020-ம் ஆண்டு நடக்க உள்ள டி20 உலகக்கோப்பையில் மகிந்திரசிங் தோனி இருக்க மாட்டார் என்றும் அதற்கு முன்னோட்டமாகவே இந்த ஓய்வு என்று ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.யாரை ஒரம்கட்டுகிறார்களோ அவர் தான்2007-ம் ஆண்டு நடந்த உலகக்கோப்பை டி20 தொடரையும் இந்திய அணிக்கு சாம்பியன் பட்டத்தையும் வென்றுகொடுத்தது குறிப்பிடத்தக்கது.
DINASUVADU