மதுரையில் டிடிவி தினகரனுடன் எம்எல்ஏ கருணாஸ் சந்திப்பு ..!
மதுரை தனியார் விடுதியில் டிடிவி தினகரனுடன் எம்எல்ஏ கருணாஸ் சந்தித்துள்ளார்.
18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் நேற்று முன்தினம் (செப்டம்பர் 25 ஆம் தேதி)சபாநாயகரின் உத்தரவு செல்லும் என்று தீர்ப்பு அளித்தார் 3வது நீதிபதி சத்யநாராயணன்.மேலும் அதேபோல் 18 எம்.எல்.ஏக்களின் மனுக்களை தள்ளுபடி செய்தார் நீதிபதி சத்தியநாராயணன்.
இந்நிலையில் மதுரை தனியார் விடுதியில் டிடிவி தினகரனுடன் எம்எல்ஏ கருணாஸ் சந்தித்துள்ளார்.டிடிவி-கருணாஸ் சந்திப்பின்போது தங்க தமிழ்ச்செல்வன், சாத்தூர் சுப்பிரமணியன் ஆகியோர் உடனிருந்தனர்.