கேரள மக்கள் ஆதரவால் தான் நாங்கள் ஆட்சிக்கு வந்தோம்…!பாஜகவால் அல்ல …! கேரள முதல்வர் பினராயி விஜயன் அதிரடி

Default Image

கேரள மக்கள் ஆதரவால் நாங்கள் ஆட்சிக்கு வந்தோம் என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
இன்று பாஜக தேசிய தலைவர் அமித்ஷா கூறுகையில், ஐயப்ப பக்தர்களின் நம்பிக்கையை மாநில அரசு புண்படுத்த நினைக்க கூடாது .பாஜக, பக்தர்களோடும் அவர்களது நம்பிக்கையோடும் துணை நிற்கும்.சபரிமலையில் எப்படி பெண்களுக்கு அனுமதி இல்லையோ ,அதேபோல் இந்தியாவில் பல கோயில்களில் ஆண்களுக்கும் அனுமதி இல்லை. நீதிமன்ற தீர்ப்பை காட்டி வன்முறையை உருவாக்க முயல வேண்டாம் என்று பாஜக தேசிய தலைவர் அமித்ஷா தெரிவித்தார்.
Image result for pinarayi vijayan amith Shah
இவரது கருத்துக்கு பதில் தெரிவிக்கும் வகையில் கேரள முதல்வர் பினராயி விஜயன் கருத்து தெரிவித்துள்ளார்.அவர் கூறுகையில்,  கேரள மக்கள் ஆதரவால் நாங்கள் ஆட்சிக்கு வந்தோம். பாஜகவின் கருணையால் அல்ல.கேரளாவில் ஆட்சியை அகற்றுவோம் என்ற அமித்ஷாவின் பேச்சு அரசியல் சாசனத்திற்கு எதிரானது என்றும்  கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்